மேலும் அறிய

திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!

கள்ளக்குறிச்சி மரணங்கள் விபத்தல்ல, திமுகவின் படுகொலை - கஞ்சா மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில் அன்புமணி விளாசல்...

விழுப்புரம் : திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனி குருகி உள்ளதாகவும் ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் மதுவை பற்றியோ போதை பொருள் தடுப்பு குறித்து ஒரு வார்த்தை இடம்பெறவில்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் அதிமுக வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு மற்றும் பாமக வேட்பாளர் சிவக்குமாரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது மேடையில் பேசிய அன்புமணி தமிழ்நாட்டை பாதுகாக்க காப்பாற்ற வேண்டும் என்றால் கஞ்சா விற்கின்ற திமுக,பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத திமுகவை விரட்டியடிக்க வேண்டும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கையாளாகாத திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத திமுக ஆட்சியாக உள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத திமுகவிற்கு எதற்கு ஆட்சி பதவி விட்டுட்டு செல்லுங்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக உள்ளதால் அதனால் நாங்கள் ஒன்றினைந்துள்ளதாக தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் வெள்ளைக்காரகள் போதைக்காக பயன்படுத்திய அனைத்து போதை வஸ்துகள் கிடைப்பதாகவும்,மூன்று பெண் பிள்கைகளை பெற்ற தகப்பகனாக கேட்பது தமிழ்நாட்டின் முதலமைச்சாரக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் போது தான் ஸ்டாலினுக்கு சமூக நீதி ஞாபத்திற்கு வரும் ஐந்தாண்டு காலம் சமூக நீதிக்கு எதையாவது திமுக செய்தார்களா, ஐந்தாண்டில் பட்டியலின மக்களுக்கு என்ன திமுக ஆட்சியில் செய்தார்கள் என கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனி குருகி உள்ளதாகவும், பட்டியலினமக்கள் கிறித்துவர்கள் வன்னியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே திமுகவினர் பயன்படுத்துவதாகவும், பட்டியலின மக்களின் வாக்கு மட்டும் தான் வேண்டும் அமைச்சர்கள் பட்டியலில் 30 வது இடம் 34 வது இடம் தான் அமைச்சர் பதவியை பட்டியலினத்தவருக்கு தருவதாக குற்றஞ்சாட்டினார். 

ஸ்டாலினை சுற்றி வியாபாரி அமைச்சர்கள் தான் உள்ளதாகவும் கிச்சென் கேபினெட்டாக வியாபாரி ஏ வ வேலு, செந்தில்பாலாஜி, நேரு, காந்தி ஆகிய நான்கு அமைச்சர்கள் உள்ளதாகவும், திமுகவில் பொன்முடி கதை முடிந்து விட்டது ஒதுக்கி விட்டார்கள், மாற்றம் வேண்டும் தமிழ்நாட்டை காப்பாத்த வேண்டும், திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். இது வெறும் அவர்கள் கொடுத்த வாக்குறுதியில் 13 விழுக்காடு மட்டுமே இதனால் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றவுடன் நெசவாளர்களுக்கு தனியாக பட்ஜெட் போடுவோம் சமூக நீதியை நிலை நாட்டுவோம் இது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடைபெறும், எல்லாம் சுயமரியாதையாக வாழ திமுகவை விரட்ட வேண்டும் கொள்ளை அடிக்கிற திமுக தேவையில்லை என கூறினார். 

ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் மதுவை பற்றியோ போதை பொருள் தடுப்பு குறித்து ஒரு வார்த்தை இடம்பெறவில்லை, தேர்தல் அறிக்கையை தயாரித்த கனிமொழி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பினை கொண்டு வருவோம் என சொன்னார்கள் ஆனால் அதனை செய்யவில்லை, தமிழ்நாட்டிற்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்டாலின் இது செய்தேன் அதை செய்தேன் என கூற முடியாமல் 8 ஆயிரம் கூப்பன் கொடுப்பேன் என்கிறார்கள் அது வெறும் வெத்து பேப்பர் தான் என்றும் விவசாயிகளின் எதிரி தான் திமுக என சாடினார்.சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது எதை கேட்டாலும் பாஜக என ஸ்டாலின் கூறுகிறார் அவர் டெல்லிக்கு சென்று அவர்களால் கேட்டு வாங்க முடியவில்லை கள்ளக்குறிச்சியில் 67 பேர் கள்ளச்சாராயத்தினால் உயிரிழக்கவில்லை திமுகவினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget