மேலும் அறிய

AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

Tamil Nadu Assembly Election: தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பரப்புரையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டை என்று கூறப்பட்டு வருகிறது. 

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டதும், எம்ஜிஆர் மதுரையிலும் போட்டியிட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிமுக-விற்கும், தென் தமிழகத்திற்கும் இடையே அதிக பிணைப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

கடந்த 1991ம் ஆண்டு முதல் கடந்த 2021ம் ஆண்டு வரை தென் தமிழகத்தில் அதிமுக-வின் வெற்றி எப்படி இருந்தது என்பதை கீழே காணலாம். 1991ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தென் தமிழகத்தில் மொத்தம் 63 தொகுதிகள் இருந்தது. பின்னர், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு 58 ஆக குறைந்தது.

1991ம் ஆண்டு:

1991ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மொத்தம் 164 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் தென் தமிழகத்தில் மட்டும் அதிமுக 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1996ம் ஆண்டு:

1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மொத்தமாக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் தென் தமிழகத்தில் 2 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி மீதான அதிருப்தியில் இந்த தோல்வியை அதிமுக எதிர்கொண்டது.

2001ம் ஆண்டு:

2001ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் தென் தமிழகத்தில் மட்டும் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றியால் மீண்டும் ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் ஆனார்.

2006ம் ஆண்டு:

2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் தென் தமிழகத்தில் அதிமுக மொத்தமாக 16 இடங்களில் வெற்றி பெற்றது.

2011ம் ஆண்டு:

மின்தடை, ஈழத்தில் நடந்த இனப்படுகொலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. மொத்தம் 150 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, தென் தமிழகத்தில் மொத்தமுள்ள 58 தொகுதிகளில் 33 இடங்களில் வெற்றி பெற்றது.

2016ம் ஆண்டு:

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை அதிமுக இந்த தேர்தலில் பிடித்தது. தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் அதிமுக வெற்றி பெற,  தென் தமிழகத்தில் மட்டும் 32 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த ஆட்சியின்போதுதான் ஜெயலலிதா காலமானார். 

2021ம் ஆண்டு:

ஜெயலிதா இல்லாமல் முதன்முறையாக பொதுத்தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த தேர்தலில் அதிமுக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் 16 தொகுதிகள் தென் தமிழகத்தில் பெற்ற வெற்றி ஆகும்.

தென் தமிழகம் என்பது அதிமுக-வின் கோட்டையா? என்பது கடந்த கால தரவுகள் மூலம் அறியலாம். தென் தமிழகத்தில் அதிமுக-வின் அடையாளமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்த நிலையில், முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை இணைக்கும் முக்கிய நபராக உள்ள தினகரன் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், சசிகலா அதிமுக கூட்டணிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். 

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வின் வசம் தென் தமிழகம் செல்லுமா? இல்லையா? என்பது மே 4ம் தேதி தெரிந்துவிடும்.

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget