மேலும் அறிய

Tamil compulsory: கட்டாயத் தமிழ் கற்பிக்கும் பிற கல்வி வாரியப் பள்ளிகள் எவை? வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ் கற்றல் சட்டத்தின்படி தமிழ் கற்பிக்கும் பிற கல்வி வாரியப் பள்ளிகள் எவை?- வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் கற்றல் சட்டத்தின்படி தமிழ் கற்பிக்கும் பிற கல்வி வாரியப் பள்ளிகள் எவை?- வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  

’’தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம்  தவிர்த்த பிற கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் நடப்பாண்டில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், அடுத்த ஆண்டில் பத்தாம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட வேண்டும்; அதற்கான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை சரியான நேரத்தில் எச்சரிக்கும் வகையிலான இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

அரசியல் துணிவு அவசியம்

தமிழ்நாட்டில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ) பாடத் திட்டம், இந்திய இடைநிலைக் கல்வி  சான்றிதழ் (ஐ.சி.எஸ்.சி) பாடத்திட்டம் உள்ளிட்ட பாடத்திட்டங்களை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் (விலக்களிக்கப்பட்ட சிலவற்றைத் தவிர) பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணை கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதை வெற்றியாக செயல்படுத்துவதற்கு அரசியல் துணிவும்,  விழிப்புணர்வும், தொடர் முயற்சியும் தேவை என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலம் நிலவுகிறது. அதை மாற்றுவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் நாள் தமிழ் கற்றல் சட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்து நிறைவேற்றினார். இச்சட்டம் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். அதன்படி 2006-07 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பில் தொடங்கி, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக நீட்டிக்கப்பட்டு, 2015-16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சில தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றதால் இன்று வரை, மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்ப் பாடம் கட்டாயமாக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.

 தமிழ் உணர்வாளர்களின் எதிர்பார்ப்பு

தமிழ்க் கற்றல் சட்டத்தின்படி 2015- 16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததைக் கண்டித்தும், தமிழ்க் கற்றல் சட்டத்தின்கீழ் பிற கல்வி வாரிய பள்ளிகளையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பா.ம.க.  தொடர் இயக்கங்களை மேற்கொண்டது. அதன் காரணமாகவே பிற கல்வி வாரியப்  பள்ளிகளையும் தமிழ்க் கற்றல் சட்டத்தில் சேர்ப்பதற்கான அரசாணை எண் 145 கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணை எதற்காக  பிறப்பிக்கப் பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

தமிழ்க் கற்றல் சட்டத்தை மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளில் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வி, பிற கல்வி வாரிய பள்ளிகளில் செயல்படுத்துவதிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே பா.ம.க.வின் கவலை ஆகும். தமிழ்க் கற்றல் சட்டத்தின் முதன்மைக் கூறுகளில் ஒன்று, அதற்கான அரசாணைகளில் உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்புக்கு தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதுடன், அதற்கான தேர்வுகளையும் நடத்தி அது தொடர்பான ஆவணங்களை கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான். 

மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் மொழிப் பாடத்தை கற்பித்ததாகவும், அதற்கான தேர்வுகளை நடத்தியதாகவும் ஆவணங்களை தாக்கல் செய்த பள்ளி நிர்வாகங்கள், கடைசி நேரத்தில் தங்களின் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதற்கான வசதிகள் இல்லை என்று கூறி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வை எழுதுவதிலிருந்து தங்கள் மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் மூலம் விலக்கு பெற்றன. அதேநிலை பிற கல்வி வாரிய பள்ளிகளில் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

வெள்ளை அறிக்கை வெளியிடுக

பிற கல்வி வாரியப் பள்ளிகளில் நடப்பாண்டில் ஒன்பதாம் வகுப்புக்கும், அடுத்த ஆண்டில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கும் தமிழ் மொழிப் பாடத்தேர்வை தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது சிறந்த ஏற்பாடுதான். ஆனால், அதற்கு முன்பாக பிற கல்வி வாரிய பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை தமிழ்மொழிப் பாடம் கற்பிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா? என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். எந்தெந்த பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜூலை மாதம் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கை திறம்பட நடத்தி, மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.  தமிழ்க் கற்றல் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக கற்பிப்பதற்கு ஏதேனும் பள்ளிகள் மறுத்தால், அந்தப் பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்படும் வரை அவற்றின் முன் பா.ம.க. அறவழிப் போராட்டம் நடத்தும் என எச்சரிக்கிறேன்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget