மேலும் அறிய

Vijay Speech: வருங்கால வாக்காளர்களே..! அசுரன் படத்தோட மாஸ் டயலாக் - விஜயின் அட்டகாசமான முழு பேச்சு இதோ

மாநில அளவில் பள்ளி பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு, விருது மற்றும் ரொக்கப்பணம் வழங்கி நடிகர் விஜய் ஊக்குவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக, முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.  சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்படத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய் கலந்துகொண்டு இந்த விருதுகளை வழங்கினார்.

நண்பா..நண்பிகள்..

நிகழ்ச்சியில் பேசிய அவர் “ என் நெஞ்சில் குடியிருக்கும் பொதுத்தேர்வில் சாதனை படைத்த நண்பா, நண்பிகளுக்கும், மக்கள் இயக்க நண்பர்களுக்கும் வணக்கம். ஆடியோ விழா, விருது விழா போன்ற பலவற்றில் நான் பங்கேற்று இருக்கிறேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுதான் முதல்முறை. ஏதோ பெரிய பொறுப்பு வந்ததாக உணர்கிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்கிறேன் என்ற பழமொழி உள்ளது. உங்களை பார்க்கும்போது என்னுடைய பள்ளிப்பருவம் நினைவுக்கு வருகிறது. ”

”பிரைட் ஸ்டூடண்ட் இல்லை”

நான் வந்து உங்கள மாதிரி பெரிய பிரைட் ஸ்டூடண்ட்லாம் கிடையாது. ரொம்ப ரொம்ப ஏவ்ரேஜ் ஒரு ஜஸ்ட் பாஸ் ஸ்டூடண்ட் மட்டும் தான். நான் வந்து நடிகர் ஆகலன்னா, அது ஆகியிருப்ப, இது ஆகியிருப்ப, ஒரு டாக்டர் ஆகியிருப்ப அப்டிலா சொல்லி உங்கள போர் அடிக்க விரும்பல. எனக்கு எனோட கனவுலா சினிமா, நடிப்பு தான். அதை மட்டும் தான் என்னோட பயணம் போயிட்டு இருந்தது. ஒருவேளை.... சரி அதவிடுங்க அதபத்தி இப்ப எதுக்கு. (அரசியல்வாதி ஆகியிருந்தால் என்பது போன்று பேச வந்தார் என சந்தேகிக்கப்படுகிறது. )

அசுரன் வசனம் பேசிய விஜய்:

இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய மிக முக்கிய காரணம் அண்மையில் ஒரு படம் பார்த்தேன்.  அதில் ஒரு வசனம் நான் கேட்டேன், காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபா இருந்த பிடிங்குக்குவாங்க, ஆனா படிப்ப மட்டும் உண்ட இருந்த எடுத்துக்குவா முடியாதுன்னு. அது என்ன ரொம்ப பாதிச்ச ஒரு லைன்னா இருந்துச்சு. நூற்றுக்கு நூறு உண்மை மட்டும் இல்ல, இதுதான் எதார்த்தமும் கூட. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்விக்கு, எனது தரப்பில் இருந்து ஏதாவது செய்ய வேண்டும் என எனது மனிதில் நீண்டகாலமாக ஓடிக்கொண்டு இருந்தது. அதுக்கான நேரம் தான் இது என நான் நினைக்கிறேன்.

பிடிக்காத அட்வைஸ்:

மாணவர்களின் வெற்றிக்கு உதவிய ஆசியர்களுக்கும் ,அவர்களை அடையாளம் காண உதவிய விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கும் நன்றி. வேறென்ன வாழ்க்கைல ஈசியா கிடைக்கிறது அட்வைஸ் தான். அது எல்லாம் உங்களுக்கு சுத்தமா பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். அடுத்து படி, படி, படிப்புன்னு, ஆனா இந்த மாதிரியான நிகழ்ச்சியிலா இத தவிர வேற என்ன பேசுறதுன்னு தெரியல. 

அட்வைஸ் செய்த விஜய்:

எனக்கு பிடித்த சில விஷயங்களை சொல்கிறேன். பிடித்தால் எடுத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள். பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் உடனே விட்டுவிடுகிறேன். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது மட்டும் முழுமையான கல்வி கிடையாது. பள்ளி, கல்லூரியில் பயின்ற அனைத்தும் மறந்த பிறகு நமது நினைவில் இருப்பதே, நமது நினைவில் எது எஞ்சி இருக்கிறதோ அது தான் கல்வி என அறிவியல் ஆராய்ச்சியாளர் ஐன்ஸ்டீன் சொல்லி இருக்கிறார். முதலில் புரியாவிட்டாலும் போக போக ஒரு மாதிரியாக எனக்கும் பிடித்தது. சரி எனக்கே புரிகிறது என்றால் உங்களுக்கும் பிடிக்கும் என்பதற்காக அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

எது முக்கியம்?

பள்ளியில் படித்த வேதியியல், இயற்பியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை எல்லாம் நிக்கிவிட்டால், நமது குணம் மற்றும் சிந்திக்கும் திறன் மட்டுமே எஞ்சி இருக்கும். படிக்கணும், மார்க்ஸ், கிரேட்ஸ் எல்லாம் முக்கியம் தான். ஆனால் அதையும் தாண்டி உங்களது குணம் மற்றும் சிந்திக்கும் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான், கல்வி முழுமையாகிறது. 

சின்ன பழமொழி:

பணத்தை இழந்தால் எந்த இழப்பும் இல்லை, ஆரோக்கியத்தை இழந்தால் எதையோ இழக்கிறோம் ஆனால் குணத்தை இழந்தால் நாம் எல்லாத்தையுமே இழந்துவிடுகிறோம். மாணவர்களுக்கு தற்போது வீட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு இடங்களில், மாவட்டங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின் கண்காணிப்பில் இருந்து வெளியேறி புதிய வாழ்க்கை ஒன்றை தொடங்கப்போகிறீர்கள். அங்கு ஒரு சுதந்திரம் கிடைக்கும். அதைமட்டும் சுய ஒழுக்கத்துடன் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நம் வாழ்க்கை..நம் கையில்..

ஒழுக்கம்னு சொல்லி யாரும் லைஃப என்ஜாய் பண்ணக்கூடாதுன்னு நான் சொல்லல. வாழ்க்கைய நல்லா கொண்டாடுங்க. அதுரொம்ப முக்கியம். அதேநேரம், உங்களோட சுய அடையாளத்தை எந்த காரணத்துக்காவும் விட்டுக்கொடுக்காதிங்க. நம்ம வாழ்க்கை நம்ம கையிலா தான் அப்டிங்குறதா, மூளையில எங்காயச்சு போட்டு வைங்க. அப்பப்ப நியாபகப்படுத்திக்கிங்க.

பொய் செய்திகள்:

சிந்திக்கும் திறன் என்பது மிக முக்கியம். இன்றைய உலகம் என்பது முழுவது தரவுகள் அடிப்படையிலானது. எங்க பாத்தாலும் வாட்ஸ்-அப். பேஸ்புக், இன்ஸ்டா அப்டின்னு நெறய இருக்கு. எல்லாத்தலயும் தகவல்கள் அதுல பெரும்பாலும் தவறான செய்திகள் தான். சமூக வலைதளங்களில் செய்த் போட்ற ஒரு சிலருக்கு, மறைமுகமாக ஏதோ ஒரு நோக்கம் இருக்கு. கவர்ச்சிகரமான தகவல்கள் மூலமா நம்ம கவனத்த ஈர்க்க பார்க்கலாம் அப்டின்னு போடுறாங்க. அதுல எத நம்பலாம், எது வேணும், வேணாம் அப்டின்னு நீங்க முடிவு பண்ணனும். இதுக்கு உங்க பாடப்புத்தகங்களை தாண்டி படிக்கனும்.   

படிக்கிற ஆள் நான் கிடையாது..

ஆமா, நீயெல்லாம் ரொம்ப படிச்சுவான்னு எங்களுக்கு அட்வைஸ் பண்ண வரியான்னு நீங்க கேக்குறது தெரியுது. நா ஒத்துக்குறங்க, முன்னாடி எல்லாம் எனக்கு இந்த படிக்குற பழக்கம் ரொம்ப இல்ல. இப்ப தான் வந்து இருக்கு, அது எனக்கு பிடிச்சு இருக்கு. படிக்கிறத விட படிச்சித சொன்னா கேக்குறது தான் எனக்கு பிடிக்கும். எனக்கு கதை சொல்ல வர்ரப்ப கூட எழுதி கொடுத்தா படிக்க மாட்டன். சொல்லுங்க அது தான் எனக்கு நல்ல கனெக்ட் ஆகும்னு கேப்ப. அதனால முடிஞ்ச வரைக்கும் படிங்க. எல்லா தலைவர்களை பத்தி தெரிஞ்சுக்கங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர பத்தி தெரிஞ்சுக்கோங்க. நல்லத எடுத்துக்கோங்க, மத்தத விட்டுறுங்க. இத தான் நீங்க இன்னைக்கு வீட்டுக்கு கொண்டு போகனும்ப்னு நினைக்குற.

குட்டிக்கதை:

நண்பனை பத்தி சொல்லு. உன்ன பத்தி சொல்றன் அப்டின்னு சொல்லுவாங்க. எனக்கு தெரிஞ்சு அதெல்லா இப்ப மாறிடுச்சி, ஆனா, இப்ப எல்லாம் அது மாற்டுச்சு. சோசியல் மீடியலா நீ எந்த பேஜ்-அ ஃபாலோ பன்றன்னு சொல்லு, உன்ன பத்தி நான் சொல்றன் அதுதான் இன்னைக்கு காலமா மாறிடுச்சு. 

நாளைய வாக்காளர்கள்:

மாணவர்களாகிய நீங்க தாங்க நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து வரக்கூடிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போறிங்க. ஆனா, நம்ம விரல வெச்சு நம்ம கண்ணையே குத்துறதுன்னு கேள்விபட்டு இருக்கிங்களா. அதுதான் இப்ப நடந்துட்டு இருக்கு. அததான் நாம இப்ப செஞ்சுட்டு இருக்கோம். எது? இந்த காச வாங்கிட்டு ஓட்டு போட்றது. உதாரணமா ஒரு ஓட்டுக்கு 1000 ரூபான்னு வெச்சிக்கிட்ட, ஒரு தொகுதில 1.5 லட்சம் பேருக்கு பணம் கொடுத்த மொத்தம் 15 கோடி ஆகும்.  அப்ப, ஒருத்தர் 15 கோடி செலவு பண்ணா முன்னாடி எவ்வளவு சம்பாதிச்சு இருப்பாரு யோசிச்சு பாருங்க. இது எல்லாம் உங்க கல்வில சொல்லி கொடுக்கணும்னு நான் ஆசைபட்றன்.

காசு வாங்கிட்டு ஓட்டு போடாத..

மாணவர்கள் எல்லாம் பெத்தவங்ககிட்ட காசு வாங்கிட்டு ஓட்டு போடாதிங்கனு சொல்லுங்க. முயற்சி செய்ங்க. அடுத்தடுத்த வருஷத்துல நீங்க தான் முதல் தலைமுறை  வாக்காளர்கள். இதெல்லாம் நடக்கும்போது தன் ஒரு கல்வி முறையே முழுமையா இருக்கும். ஒரே ஒரு சின்ன கோரிக்கை, உங்க வகுப்புலயோ, தெருவிலயோ யாராச்சும் தேர்விலா ஜெயிக்கலன்னா அவங்கள ஊக்கப்படுத்துங்க.  அதுதான் நீங்க எனக்கு கொடுத்த பரிசு. ஜெயிச்சவங்களுக்கு வாழ்த்துகள், தோத்தவங்க சீக்கிரமே ஜெயிக்க வாழ்த்துகள். எக்காரணத்தை கொண்டும் மாணவர்கள் தவறான முடிவு எடுக்காதிங்க. நீங்க நினைக்கிற செய்ங்க.

உனக்குல்ல ஒருத்தன், ஒருத்தி இருப்பாங்க, அவங்க சொல்ற கேளுங்க. மத்தவங்க டிஸ்கரேஜ் பண்ணா கேக்காதிங்க. வளர்ப்போம் கல்வி..வளர்க என் குட்டி நண்பா..நண்பீஸ்” என விஜய் பேசினார்.

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

P Chidambaram Slams Modi  : VK Pandian Profile : மோடியை அலறவிட்ட தமிழன் ஒடிசாவின் முடிசூடா மன்னன் யார் இந்த VK பாண்டியன்?Dinesh karthik Retirement  : RCB-யின் காப்பான்! தினேஷ் கார்த்திக் கடந்து வந்த பாதை!Arvind Kejriwal on PM Candidate Rahul  : மம்தா பாணியில்  கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளரா ராகுல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Breaking LIVE : நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
Breaking LIVE : நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Embed widget