மேலும் அறிய

குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்

காலிப்பணியிடங்கள் லட்சக்கணக்கில் இருக்கும்போது, அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை சொற்ப எண்ணிக்கையில் வெளியிடுவதா? - டிடிவி தினகரன் கேள்வி

அதிகப்படியான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி வசூலிப்போர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 46 வகையிலான பணிகளுக்கு 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 15 லட்சம் தேர்வர்கள் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு வெறும் 6,574 காலிப்பணியிடங்களை அறிவித்திருப்பது, அரசுப் பணி கனவில் அத்தேர்வை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இரவு பகலாகத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

அரசுத் துறைகளில் நிலவும் அனைத்து காலிப்பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தவெக, லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிலவும் தமிழக அரசில் 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டும் அறிவிப்பாணையை வெளியிட்டிருப்பது, கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவுவது போல அமைந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தரப் பணி என வேலைவாய்ப்பு சம்பந்தமாக தவெக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற தற்போதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களையும் சொற்ப அளவிற்கு குறைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, தமிழ்நாடு அரசுத் துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடும் வகையிலும், தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பைத் திருத்தி, அதிகப்படியான காலிப்பணியிடங்களுடன் கூடிய புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Embed widget