மேலும் அறிய

TNTET: 2 ஆண்டாக நடக்காத ஆசிரியர் தகுதித் தேர்வு; அறிவிக்கையை உடனே வெளியிட வலியுறுத்தல்

TNTET 2024: தமிழ்நாட்டில் 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இரு ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

‘’தமிழ்நாட்டில் 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், தேர்வு நடத்துவதற்கான ஜூலை மாதம் முடிவடைந்து, ஆகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், தேர்வுக்கான அறிவிப்பு கூட இன்னும் வெளியிடப்படாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் இந்த விதியை மதிப்பதே இல்லை

மத்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும்.  ஆசிரியர் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் உடனடியாக சேர வேண்டும் என்பதற்காகவே இந்த விதி கொண்டு வரப்பட்டது. அதன்படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் நிலையில், தமிழ்நாட்டில் இந்த விதியை அரசு மதிப்பதே இல்லை; தகுதித் தேர்வும் நடத்தப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்படி நடக்கவில்லை.  அதன்பின், நடப்பாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை.

தனியார் பள்ளிகளில் கூட சேர முடியவில்லை

2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இன்று வரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர்.  ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கான தகுதியை பெற முடியவில்லை. அதனால் தனியார் பள்ளிகளில் கூட அவர்களால் பணிக்கு சேர முடியவில்லை.

லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்பு சார்ந்த விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டக் கூடாது. 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விரைவாக தேர்வை நடத்தி முடிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Car Maintenance Tips: நீங்க போற வழியில கார் திடீர்னு நின்னுடுச்சா.? ஸ்டார்ட் ஆகலையா.? பதறாம இதெல்லாம் செஞ்சு பாருங்க
நீங்க போற வழியில கார் திடீர்னு நின்னுடுச்சா.? ஸ்டார்ட் ஆகலையா.? பதறாம இதெல்லாம் செஞ்சு பாருங்க
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Embed widget