Group 4 Exam: 7,382 காலி பணியிடங்கள்...நாளை நடைபெறும் குரூப் 4..தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடத்தப்படவுள்ளது.
மாநிலத்தில் குரூப்-4 தேர்வு நாளை நடைபெறவுள்ளதையடுத்து, கரூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் திரு பிரபுசங்கர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. pic.twitter.com/36c13aEHrG
— AIR News Chennai (@airnews_Chennai) July 23, 2022
மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படவுள்ளது. அதில், 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும்.
முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.
முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சம் தேர்வர்கள் பெற வேண்டும். அவர்களின் பெயர்கள் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும்.
தேர்வு முடிவுகள்
அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். நவம்பர் மாதத்தில் நேர்காணல் நடத்தப்படவுள்ளது.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை
ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும். டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 தேர்வு வருகின்ற 24.07.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.வே.விஷ்ணு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. pic.twitter.com/eWCkIIPfvW
— District Collector, Tirunelveli (@Collectortnv) July 22, 2022
விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழியில் தேர்வை (CBT) நடத்தவும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்