TNEA Counselling 2025: Choice Filling..மாணவர்கள் செய்யும் தவறுகள்.. பட்டியலிட்ட ஜெயப்பிரகாஷ் காந்தி!
அவர்களுக்கான சாய்ஸ் ஃபில்லிங் தளம் திறக்கப்பட்டதும் கண்களை மூடிக்கொண்டு முதல் நாளிலேயே மாணவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்து விடுகின்றனர்.

2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியான நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் உயரும் என்று கல்வியாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை மாணவர்களின் மதிப்பெண் முறை அதிகமாக உள்ளது. இந்த முறை 41 ஆயிரம் மாணவர்களுக்கு அதிகமாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
மாணவர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன?
இதில் சாய்ஸ் ஃபில்லிங் என்னும் முறை மூலம் மாணவர்கள் தங்கள் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்ப கிடைக்கும் கல்லூரியைத் தேர்வு செய்கின்றனர். இதில் மாணவர்கள் செய்யும் தவறுகளைப் பட்டியலிடுகிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
ஏபிபி நாடு இணையதளத்திடம் ’வானமே எல்லை’ நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
எந்த கட்டக் கலந்தாய்வில் வருகிறோம் என்பதை மாணவர்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கான சாய்ஸ் ஃபில்லிங் தளம் திறக்கப்பட்டதும் கண்களை மூடிக்கொண்டு முதல் நாளிலேயே மாணவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்து விடுகின்றனர். அதற்கு பிறகு நம்மால் கல்லூரியை மாற்ற முடியாது.
கல்லூரியா, கோர்ஸா?
கண்களை மூடிக்கொண்டு கல்லூரிகளைத் தேர்வு செய்வதைவிட, கோர்ஸின் முக்கியத்துவம் அறிந்து, படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சாய்ஸ் (கல்லூரிகளை) கொடுக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த கல்லூரி கிடைக்கும்.
சமூக வலைதளங்களை அப்படியே நம்ப வேண்டாம்..
அதேபோல சமூக வலைதளங்களில் இந்த கல்லூரி சிறப்பான கல்லூரி, இந்த கோர்ஸ் டாப் கோர்ஸ் என்று சிலர் சொல்வதை அப்படியே நம்பிவிட வேண்டாம்.
இவ்வாறு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
அவர் பேசியதை விரிவாக வீடியோ வடிவில் கீழே அறிந்துகொள்ளலாம்.






















