மேலும் அறிய

TNCMTSE 2024: ரூ.10 ஆயிரம் உதவித்தொகை; முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!

TNCMTSE Exam 2024: முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்வின் மூலம்‌ 1000 மாணவர்கள் நடைமுறையில்‌ உள்ள இட ஒதுக்கீட்டின்‌ அடிப்படையில்‌ (500 மாணவர்கள்‌, 500 மாணவியர்கள்‌) தெரிவு செய்யப்படுவர்.

அரசுப்பள்ளி பிளஸ் 1 மாணவர்கள், ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அளிக்கும் முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு நாளை கடைசித் தேதி ஆகும்.

என்ன தகுதி?

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தமிழ்நாடு மாநிலப்‌ பாடத்திட்டத்தின்‌ கீழ்‌ 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்பள்ளிகளில்‌ பத்தாம்‌ வகுப்பு பயின்று தற்போது 2024- 2025ஆம்‌ கல்வியாண்டில்‌ பதினொன்றாம்‌ வகுப்பினை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்கள்‌ விண்ணப்பிக்கலாம். குறிப்பாக www.dge.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலமாக விண்ணப்பப் ‌படிவத்தினை 26.06.2024 வரை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

அவ்வாறு பதிவிறக்கம்‌ செய்யப்படும்‌ விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேர்வு கட்டணம்‌ ரூ.50/- (ரூபாய்‌ ஐம்பது மட்டும்‌) சேர்த்து 26.06.2024-ற்குள்‌ மாணவர்‌ பயிலும்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை

இத்தேர்வின் மூலம்‌ 1000 மாணவர்கள் நடைமுறையில்‌ உள்ள இட ஒதுக்கீட்டின்‌ அடிப்படையில்‌ (500 மாணவர்கள்‌, 500 மாணவியர்கள்‌) தெரிவு செய்யப்படுவர். அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய்‌ 10,000 இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்‌. குறிப்பாக மாதம்‌ ரூ.1000/- வீதம்‌ ஒரு கல்வியாண்டில் 10 மாதங்களுக்கு மட்டும்‌ அளிக்கப்படும்.

என்ன பாடத்திட்டம் ?

தமிழ்நாடு அரசின்‌ 9 மற்றும்‌ 10ஆம்‌ வகுப்புகளில்‌ கணிதம்‌, அறிவியல்‌ மற்றும் ‌சமூக அறிவியல்‌ பாடப்‌ புத்தகத்தில்‌ உள்ள பாடங்களே பாடத்திட்டங்கள் ஆகும். இதன்‌ அடிப்படையில் ‌கொள்குறி வகையில்‌ தேர்வு இரு தாள்களாக நடத்தப்பெறும்‌.

முதல்‌ தாளில்‌ கணிதம்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌. இரண்டாம்‌ தாளில்‌ அறிவியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌. முதல்‌ தாள்‌ காலை 10.00 மணி முதல்‌ 12.00 மணி வரையிலும்‌ இரண்டாம்‌ தாள்‌ பிற்பகல்‌ 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும்‌ நடைபெறும்‌.

விண்ணப்பிப்பது எப்படி ?

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பப்‌ படிவத்தினை 26.06.2024 வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

அவ்வாறு பதிவிறக்கம்‌ செய்யப்படும்‌ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம்‌ ரூ.50/- (ரூபாய்‌ ஐம்பது மட்டும்‌) சேர்த்து 26.06.2024-ற்குள்‌ மாணவர்‌ பயிலும்‌ பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை https://tnegadge.s3.amazonaws.com/notification/TCMTSE/1718083442.pdf க்ளிக் செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://apply1.tndge.org/dge-notification/TCMTSE

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget