மேலும் அறிய

School Leave: விடாமல் பெய்யும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - எந்த மாவட்டம் தெரியுமா?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் நாளை தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், புயல் உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

பள்ளிகளுக்கு லீவு:

அதேசமயம், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் மட்டுமின்றி அங்கன்வாடி மையத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடு செய்யும் வகையில் நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மழையின் தாக்கத்தைப் பொறுத்து மற்ற மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. 

புயல் இருக்கிறதா?

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது வட தமிழகம் - புதுச்சேரி - தெற்கு ஆந்திரா நோக்கி செல்வதால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புயல் அபாயமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 

ஆனாலும், தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு தொடர்ந்து மழையின் தாக்கம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தொடர் கண்காணிப்பு:

குறிப்பாக, மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள கடலோர மாவட்டங்களில் அதிகளவு கண்காணப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தற்போதுதான் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு, தீபாவளி விடுமுறை விடப்பட்டது. இந்த சூழலில் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வுகளுக்கு பள்ளிகள் தயாராகி வரும் சூழலில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். 

மேலும், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு அம்சங்களையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் மாணவர்கள் அமராதவாறு இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு  உத்தரவிட்டுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS இடங்கள் 200 ஆக உயர்வு! மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி குட் நியூஸ்!
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS இடங்கள் 200 ஆக உயர்வு! மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி குட் நியூஸ்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Embed widget