மேலும் அறிய

’வெற்று அறிவிப்பு, இனியும் ஏமாற மாட்டோம்’- தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை- நடந்தது என்ன?

பழைய பென்சன் திட்டத்தை உடனே அமல்படுத்தக் கோருகிறோம் என்று தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி  உள்ளது.

தேர்தல் நெருங்கும் போதெல்லாம் குழு அமைக்கும் அறிவிப்பை பார்த்து இனிமேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற மாட்டார்கள் என்று தேசிய ஆசிரியர் சங்கம் விமர்சித்து உள்ளது.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறி உள்ளதாவது:


''தேசிய ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் தொடர் போராட்டத்திற்குப் பின் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதார பிரச்சனையான பென்ஷன் திட்டம் பற்றி தமிழக நிதியமைச்சர் சட்டப் பேரவையில் மௌனம் கலைந்து சில வார்த்தைகள் கூறியுள்ளார். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இந்த அரசு தங்களது தேர்தல் வாக்குறுதி எண் 305-ல் பழைய பென்சன் திட்டம் கொண்டு வருவோம் என அறிவித்திருந்தது.

ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது?

ஆனால் தற்போது மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ள ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை (UPS) பரிசீலிப்பதாக அறிவித்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக அரசு ஆசிரியர்களிடம் CPS திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை மத்திய அரசின் PFRDA நிதியில் செலுத்தவில்லை. PFRDA-ல் நிதியை செலுத்திய மாநிலங்களுக்குத்தான் மத்திய அரசின் UPS திட்டம் பொருத்தமானது. எனவே ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதனை எப்படி மத்திய அரசின் திட்டத்தில் இணைக்கப்போகிறது என்பதை நிதியமைச்சர் தெளிவு படுத்த வேண்டும். 


இனிமேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாறமாட்டார்கள்


அதை விடுத்து தேர்தல் நெருங்கும் போதெல்லாம் குழு அமைக்கும் அறிவிப்பை பார்த்து இனிமேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற மாட்டார்கள். எனவே. இந்த அரசு உண்மையிலேயே ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது அக்கறையுள்ள அரசு என்பதை நிரூபிக்க சங்கங்களை அழைத்து எந்தப் பென்ஷன் திட்டத்தை? எப்போது? எப்படி? அமல் படுத்தப் போகிறது என்ற அரசின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவேண்டும். இல்லையேல் இது வெற்று அறிவிப்பாகவே பார்க்கப்படும்.

 
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பது பழைய ஓய்வூதியத் திட்டமே தவிர குழு அமைப்பது அல்ல என்பதால் சொன்னதைச்செய்யும் அரசு எனக்கூறிக்கொள்ளும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டுகிறோம்.


இவ்வாறு தேசிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"போதைப்பாதை அழிவுப்பாதை; கல்விப்பாதையே உயர்வுப்பாதை" - நீடூர் இப்தார் விழாவில் மயிலாடுதுறை SP அட்வைஸ்..!
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Railway announcement : திண்டிவனம், திருவள்ளூர், புதுக்கோட்டையில் இனி ரயில்கள் நிற்கும்- பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
திண்டிவனம், திருவள்ளூர், புதுக்கோட்டையில் இனி ரயில்கள் நிற்கும்- பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Embed widget