மேலும் அறிய

TN RTE Admission: அக்.30 முதல் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை! யாருக்கு முன்னுரிமை? முக்கிய தேதிகள் இதோ!

Tamil Nadu RTE Admission 2025-26: பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை அக்டோபர் 30-31 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2025-26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி RTE மாணவர் சேர்க்கை அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் RTE சேர்க்கைக்கு 81,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை அக்டோபர் 30-31 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2025- 26ஆம் கல்வியாண்டிற்காக, மாநிலம் முழுவதும் 7,717 பள்ளிகள் RTE அடிப்படையில் விண்ணப்பித்துள்ளன. மொத்தம் LKG வகுப்பில் 81,927 மாணவர்களும், முதல் வகுப்பில் 89 மாணவர்களும் RTE 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்துள்ளனர். இறுதிகட்டச் சேர்க்கை அட்டவணை பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:

அக்டோபர் 30, 2025 : ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை நடைபெறும்.

அக்டோபர் 31, 2025: ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையின் (Random Selection) மூலம் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை நடைமுறை பின்பற்றப்படும்.

மாணவர் சேர்க்கை செயல்முறை

இந்த நடவடிக்கை நிறைவடைந்த பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் RTE ஒதுக்கீட்டின்கீழ் EMIS தளத்தில் இணைக்கப்படுவர். இதன் மூலம் அவர்கள் 2025-26 கல்வியாண்டிற்கான பெயர்ப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படுவார்கள்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடுஅரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம், 2009 (RTE Act) இன்கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

RTE சட்டத்தின்படி, அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் தொடக்கநிலை வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

யாருக்கெல்லாம் முன்னுரிமை?

இச்சேர்க்கை செயல்முறை, மாநில அரசின் ஆன்லைன் RTE தளத்தின் மூலம் மாணவர்கள் பயிலும் பள்ளி அளவில் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது; மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் இதனை மேற்பார்வை செய்கின்றன. ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப்பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பதையும், RTE 25% சேர்க்கை செயல்முறை மாநிலம் முழுவதும் வெளிப்படையாகவும் சமத்துவமானதாகவும் குழந்தைமையக் கொள்கைகளுடன் நிறைவேற்றப்படும் என்பதையும் மீண்டும் வலியுறுத்துவதாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Embed widget