மேலும் அறிய

TN 12th Result 2025: பிளஸ் 2 தேர்ச்சி! பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்காதீங்க! தலைவர்கள் சொல்லும் அட்வைஸ் இதுதான்!

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் செய்தியில், ”பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகின்றன. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.

தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.

பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில், “12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள்.

வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்.” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. தேர்வில் வெற்றி பெற்று, உயர் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் துணை நிலைத் தேர்வுக்கு, முழு நம்பிக்கையுடன் தங்களைத் தயார் செய்து, தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

பல்வேறு வாய்ப்புகளும், புதிய துறைகளும் உருவாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மாணவ மாணவியர் அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலம் காத்திருக்கிறது.

மாணவ, மாணவியர் அனைவரும், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுத்து, சாதனை படைக்க இறைவன் அருள் புரியட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கப் போகும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்ச்சி பெறாத மாணவச் செல்வங்கள் மனவுறுதியுடன் மீண்டும் தேர்வு எழுதி நீங்களும் இந்த ஆண்டிலே உயர்கல்வியில் சேர வாய்ப்பிருக்கிறது. நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை பற்றிய எதிர்மறையான எண்ணங்களை விடுத்து அதனை எப்படி நேர்மறையாக எதிர்கொள்ளலாம் என சிந்திக்க தொடங்குங்கள்.

தேர்வு முடிவுகள் என்பது உங்களது வாழ்க்கை தீர்மானிப்பது அல்ல. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. எனவே, மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தேர்வு எழுதுங்கள். வெற்றி பெற உங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Embed widget