மேலும் அறிய

Scholarship: அமெரிக்காவில் இலவசமாகப் படிக்கலாம்! முழு உதவித்தொகை தரும் 5 முக்கியப் பல்கலைக்கழகங்கள்

மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் வாழ்வாதாரச் செலவுகளை முழுமையாகவோ அல்லது கணிசமான அளவிலோ பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொள்கின்றன.

வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்களின் முதல் தேர்வு எப்போதுமே அமெரிக்காவாகத்தான் இருக்கிறது. தரமான கல்வி, உலகளாவிய வேலைவாய்ப்பு எனப் பல சிறப்புகள் இருந்தாலும், அங்குள்ள அதிகப்படியான கல்விக் கட்டணம் மற்றும் தங்குமிடச் செலவுகள் நடுத்தரக் குடும்பத்து மாணவர்களுக்கு ஒரு பெரிய தடையாகவே உள்ளன.

ஆனால், இந்தக் கவலையைப் போக்கும் வகையில், மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் வாழ்வாதாரச் செலவுகளை முழுமையாகவோ அல்லது கணிசமான அளவிலோ பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொள்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் 5 முக்கியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பற்றி இங்கே காணலாம்.

  1. செயின்ட் தாமஸ் பல்கலைக்கழகம் (University of St Thomas)


மினசோட்டாவில் உள்ள இப்பல்கலைக்கழகம், பிசினஸ் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ‘GHR Fellows Programme’ மூலம் முழுக் கல்விக் கட்டணச் சலுகையை வழங்குகிறது. இதுதவிர, தொழில்முனைவோராக விரும்பும் மாணவர்களுக்கு ‘Schulze Innovation’ என்ற உதவித்தொகையும் உள்ளது. இதற்குப் பள்ளிப் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.

  1. நாட்ரே டேம் பல்கலைக்கழகம் (University of Notre Dame)

பண வசதி இல்லை என்பதற்காகத் திறமையான ஒரு மாணவர்கூட கல்வியை இழக்கக்கூடாது என்ற கொள்கையை இப்பல்கலைக்கழகம் பின்பற்றுகிறது. மாணவர்களின் பொருளாதாரத் தேவையை 100% பூர்த்தி செய்யும் வகையில், பாகுபாடின்றி அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

  1. கார்னல் பல்கலைக்கழகம் (Cornell University)

ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த பல்கலைக்கழகம் ஒரு வரப்பிரசாதம். இங்கு பொறியியல், அறிவியல் போன்ற துறைகளில் முனைவர் பட்டம் பயில்வோருக்குக் கல்விக் கட்டணம், மருத்துவக் காப்பீடு மற்றும் கையில் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட முழுமையான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

  1. மிச்சிகன் டியர்பார்ன் பல்கலைக்கழகம் (University of Michigan-Dearborn)

இங்குள்ள பொறியியல், வணிகம் மற்றும் கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு, அந்தந்தத் துறை ரீதியாகப் பல்வேறு பிரத்யேக நிதியுதவித் திட்டங்கள் உள்ளன.

  1. வெஸ்ட் விர்ஜீனியா டெக் (WVU Tech)

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தப் பல்கலைக்கழகம் தகுதி அடிப்படையில் உதவித் தொகைகளை வழங்குகிறது.

இந்த உதவித்தொகைகளைப் பெறத் தகுதிகள், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மற்றும் விதிமுறைகள் ஒவ்வொரு ஆண்டும் மாறக்கூடும். எனவே, ஆர்வம் உள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று முழு விவரங்களையும் சரிபார்த்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Embed widget