மேலும் அறிய

கற்றல், கற்பித்தலில் அடுத்த உச்சம்; அரசின் திட்டத்தால் 44 லட்சம் மாணவர்களுக்கு பயன்!- என்ன தெரியுமா?

சென்னை மாவட்டத்தில்‌ நடைபெற்று வரும்‌ பணிகளில்‌ 27.01.2025 அன்று ஒக்கியம்‌ துரைபாக்கம்‌, அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌ 22931வது திறன்மிகு வகுப்பறை பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சரால்‌ நிறுவப்பட்டது.

பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி 27.01.2025 அன்று ஒக்கியம்‌ துரைபாக்கம்‌, அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌ 22931-வது திறன்மிகு வகுப்பறையினை நிறுவினார்‌.

இதுகுறித்து இன்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வித்‌ தரத்தை உயர்த்தும்‌ பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சரின்‌ சீரிய முயற்சியால்‌ தற்போதைய தொழில்நுட்ப உலகில்‌ எதிர்காலத்திற்கு எற்ற வகையில்‌ மாணவர்களை தயார்படுத்தும்‌ பொருட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தும்‌ பொருட்டு எண்ணிய தொழில்நுட்ப விரிவாக்கத்தை (Digital Technology) முன்னெடுப்பு நிகழ்வாக கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.

கற்றல், கற்பித்தலில் அடுத்த உச்சம்

புத்தகங்கள்‌ மற்றும்‌ கரும்பலகைகள்‌ வாயிலாக நடைபெற்ற கற்றல், கற்பித்தல்‌ நிகழ்வின்‌ ஓர்‌ உச்சமாக உரைகள்‌, படங்கள்‌, ஆடியோ மற்றும்‌ வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில்‌ தகவலைப்‌ பெற்று பாடப்பொருள்களை எளிதாகப்‌ புரிந்துகொள்ளவும்‌, பெற்ற தகவல்களைத்‌ தக்கவைத்து கொள்ளவும்‌ மற்றும்‌ அரசு பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன்‌ பொருத்தமான கற்றல்‌ சூழலை உருவாக்கவும்‌ 22,931 திறன்‌ மிகு வகுப்பறைகள்‌ ரூ.455.32 கோடி மதிப்பீட்டில்‌ அரசு தொடக்கப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 11,76,452 மாணவர்கள்‌ பயனடையும்‌ அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன்‌ முதற்கட்டமாக அரியலூர்‌, கடலூர்‌, நாகப்பட்டினம்‌, சேலம்‌, திருவாரூர்‌ மற்றும்‌ விழுப்பும்‌ ஆகிய மாவட்டங்களில்‌ உள்ள 493 அரசு தொடக்கப்‌ பள்ளிகளில்‌ 634 திறன்மிகு வகுப்பறைகள்‌ அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால்‌ 14.6.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும்‌ திறன்மிகு வகுப்பறைகள்‌ அமைக்கும்‌ பணி நிறைவு பெற்றது.

இறுதி கட்டமாக, சென்னை மாவட்டத்தில்‌ நடைபெற்று வரும்‌ பணிகளில்‌ 27.01.2025 அன்று ஒக்கியம்‌ துரைபாக்கம்‌, அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌22931வது திறன்மிகு வகுப்பறை பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சரால்‌ நிறுவப்பட்டது. இதை போன்று அரசு பள்ளிகளில்‌ 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ ரூ. 519.73 கோடி மதிப்பீட்டில்‌ அமைக்கும்‌ பணி தற்போது முடிவடையும்‌ நிலையில்‌ உள்ளது.

குழந்தைகள்‌ நேய வகுப்பறைகள்

இவ்விரு திட்டங்களின்‌ மூலம்‌ அரசு பள்ளிகளில்‌ பயிலும்‌ 43,89,382 மாணவர்கள்‌ பயனடைய உள்ளனர்‌. இவ்வாறு அரசு பள்ளிகளில்‌ அமைக்கப்பட உள்ள திறன்மிகு வகுப்பறைகள்‌ மற்றும்‌ உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ வாயிலாக கற்றல்‌ கற்பித்தல்‌ பணியானது எளிமையாகவும்‌, எளிதில்‌ மாணவர்களை கவரக்கூடியதாகவும்‌, பாடப்புத்தகங்களில்‌ உள்ள பாடப்பொருட்கள்‌ மற்றும்‌ அதன்‌ தொடர்புடைய விவரங்களை ஆடியோ மற்றும்‌ வீடியோ வாயிலாக பார்த்தும்‌ கேட்டும்‌ விரைந்து புரிந்துகொள்ளக்‌ கூடியதாகவும்‌ அமைய உள்ளது.

இத்தகைய திறன்மிகு வகுப்பறைகள்‌ குழந்தைகள்‌ நேய வகுப்பறைகளாக மாற்றியமைப்பதன்‌ வாயிலாக ஆசிரியர்கள்‌ இனி வரும்‌ காலங்களில்‌ ஆசிரியர்களாக மட்டுமின்றி ஒரு ஏதுவாளராகவும்‌ செயல்படுவார்கள்‌. இதன்‌ வாயிலாக மாணவர்களின்‌ கற்றல்‌ திறன்கள்‌, கற்றல்‌ விளைவுகளை அடையும்‌ திறன்கள்‌ பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது’’

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
Embed widget