மேலும் அறிய

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 5:2 என்ற அடிப்படையில் வழங்கக் கோரிக்கை

கடந்த அரசால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியத்தினையும், 01.01.2022 மற்றும் 01.07.2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகையினையும் வழங்க வேண்டும்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாநிலத்தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அழகிரிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

திருச்சி மாவட்டத் தலைவர் மாநிலப் பொதுச்செயாளர் மாரிமுத்து இயக்கச் செயல்பாடுகள் பற்றியும் மாநிலப் பொருளாளர் இளங்கோ நிதி பொது நிகழ்வு பற்றியும், மாநில அமைப்புச் செயலாளர் நவநீத கிருஷ்ணன் நன்றியுரையும் நிகழ்த்தினர்.

இக்கூட்டத்தில் புரவலர்கள் அருள் சுந்தர்ராஜன், முனைவர் சாமி சத்திய மூர்த்தி, நடராஜன், ரவிச்சந்திரன், முனைவர் பீட்டர் ராஜா, ராஜீ மற்றும் மாநில தலைமை நிலையச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர்கள் மாநில இணைச் செயலாளர்கள், மாநில மகளிர் அணி அமைப்பாளர்கள் மாநில சட்ட செயலாளர்கள், மாவட்டப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 5:2 என்ற அடிப்படையில் வழங்கக் கோரிக்கை

இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

01.01.2018ற்கு பிறகு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரிலிருந்து பணி மாறுதல் மூலம். பதவிஉயர்வு பெற்று உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் நிம்மதியாக நிர்வாகம் செய்யும் சூழல் தற்போது இல்லை. ஆகவே 01.01.2018 ற்கு பிறகு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரிலிருந்து பணிமாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிநிலையில் மற்றும் எதிர்காலப்பதவி உயர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாவண்ணம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப்பட்டியலும் முது கலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப்பட்டியலும் தயார் செய்து மேல்நிலைபப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். அரசு உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியரிடம் மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் செல்ல விருப்பா அல்லது. மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்ல விருப்பமா என்று விருப்பத்தை(Option) ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்கும் வகையில் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 5:2 என்ற அடிப்படையில் வழங்கக் கோரிக்கை

மேலும், 2018- ஆம் ஆண்டுவரை 5:2 மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி என்ற நடைமுறையில் இருந்த உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக 7:2 என மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலிருந்த 5:2 என்ற விகிதாச்சாரத்திலேயே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.  2019-2020 பள்ளிகளுக்கு கல்வி ஆண்டில் கோவிட்- 19 தொற்று காரணமாக இயலாத நிலை ஏற்பட்டதால் மாணவர்களிடமிருந்து பெற்றேர் ஆசிரியர் கழக நிதி பெறுவதிலிருந்து விலக்களித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.

மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீதம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 35 சதவீதம் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமும், 25 சதவீதம் நேரடி நியமன மூலமும் நியமனம் செய்யப்படுகிறார்கள். மாவட்டக்கல்வி அலுவலர் பணியிட நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் 40:35:25 என்ற விகிதாச்சாரத்தையே முதன்மைக்கல்வி அலுவலர், இணை இயக்குநர், இயக்குநர் பதவி உயர்விலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

இதன் மூலம்  ஆசிரியராகப் பணியில் சேர்ந்த  ஒரு சிலருக்கு இணை இயக்குநர் மற்றும் இயக்குநர் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவரை எந்த ஆசிரியரும் முதன்மைக்கல்வி அலுவலர் பணிநிலைக்கு மேல் கல்வித்துறையில் பதவி உயர்வு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியத்தினையும், 01.01.2022 மற்றும் 01.07.2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையினையும் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைப்பு செய்திகள்

மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி

Embed widget