மேலும் அறிய

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம் அமைப்பு

பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்படும் இன்டர்ன்ஷிப் செமஸ்டர் கிரெடிட்டுகளுக்கு இணையானதாக, சாஸ்த்ராவின் இந்த பாடத்திட்டம் உள்ளது.  

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரத்தில் இயங்கி வரும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி  மையம் அமைக்கப்பட்டது.

பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி  மைய திறப்பு விழா

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இளைஞர்களுக்கான முக்கியப் பொறியியல் திறன்களை மேம்படுத்துவதற்கான பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி  மைய திறப்பு விழா நடந்தது.. இதில் பங்கேற்ற தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர்.என்.எஸ்.கல்சி பேசுகையில், பிரதான கல்வியில் திறமையை இணைப்பது அறிவுப் பொருளாதாரத்தை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. உலகளாவிய உற்பத்திப் பங்கில் இந்தியாவின் உயர்வை உறுதி செய்ய உற்பத்தித் திறனின் முக்கியத்துவத்தும் தேவை என்று கூறினார். 

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம் அமைப்பு

வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கம்

பஜாஜ் ஆட்டோ லிமிடெட் இன் தலைமை மனிதவள அதிகாரி ரவி கிரண் ராமசாமி பேசுகையில், பஜாஜ் ஆட்டோவின் முதன்மை முயற்சியான இந்த திறன் பயிற்சி மையம் மூலம் திறன் பயிற்சியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கவனம் செலுத்துகிறது. பஜாஜ் ஆட்டோவின் மூத்த தலைவர்கள் மற்றும் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த ஆய்வக அமைப்பு மூலம், சாஸ்த்ராவில் உருவாக்கப்பட்ட இந்த மையம் வளர்ந்து வரும் சிறுநகரங்களில் உள்ள பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

பஜாஜ் ஆட்டோ ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொறியியல், டிப்ளமோ பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்ட 15 மையங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தும். மேலும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்காக ரூ.350 கோடி செலவிட உறுதிபூண்டுள்ளது என்றார்.

பயிற்சி பெற்ற பட்டதாரிகளை பணியமர்த்துவது

தொடக்க விழாவின் போது, டிவிஎஸ், பிரேக்ஸ் இந்தியா, பெல்ரைஸ் நிறுவனம், எம்.எம் போர்ஜிங், இந்தியா பிஸ்டன்ஸ், போன்ற 15 க்கும் மேற்பட்ட தொழில் பங்குதாரர்கள் இம்மையத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரிகளை பணியமர்த்துவது மட்டுமின்றி, அவர்களின் பணியாளர்களை இம் மையத்தின் மூலம் மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம் அமைப்பு

அதிநவீன பயிற்சி வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது

இந்த திறன் மேம்பாட்டு மையம் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறையின் அதிநவீன பயிற்சி வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்படும் இன்டர்ன்ஷிப் செமஸ்டர் கிரெடிட்டுகளுக்கு இணையானதாக, சாஸ்த்ராவின் இந்த பாடத்திட்டம் உள்ளது. மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை கொண்ட இந்த பயிற்சியில் சமூக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் சாஸ்த்ராவின் துணைவேந்தர் டாக்டர்.எஸ்.வைத்தியசுப்பிரமணியம் வரவேற்றார், பஜாஜ் ஆட்டோவின் ஜி.சுதாகர் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களை வழங்கினார். பஜாஜ் ஆட்டோவின் உலகத்தரம் வாய்ந்த இந்த பயிற்சியை பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் மூலம் வழங்க சாஸ்த்ரா உறுதியளிக்கிறது. இந்த ஒத்துழைப்பு, இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதிலும், நாட்டிற்கான திறமையான வளங்களை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்தி அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த திறன் பயிற்சி மையம் பெரும் பங்களிப்பு செய்யும்.

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget