TN Schools Reopen: 6 முதல் 12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு... பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ்...!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
Schools Reopen: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஏப்ரல் மாதமே முடிந்த தேர்வுகள்:
2022- 23ஆம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிந்தன. இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாகத் தேர்வுகள் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்வு தொடங்கி, ஏப்ரல் 28ஆம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து, மாணவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கத்திரி வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே (அதாவது இன்று) மாணவர்களுக்கு பாடநூல், நோட்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பள்ளிகள் திறப்பையொட்டி, சென்னை விருகம்பாக்கத்தல் உள்ள ஜெயகோபால் கரோடிய அரசு மகளிர் பள்ளியில் மாணவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வரவேற்றார். பள்ளி மாணவர்களுக்கு பூங்கொத்து, சாக்லெட் கொடுத்து அமைச்சர் அன்பில் மகேஸ் வரவேற்றார். கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
இதனை அடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பேசிதாவது, "பள்ளிகளுக்கு வருகை புரிந்துள்ள மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துகள். நன்றாக படித்து பெருமை சேர்க்க வேண்டும். எங்களுக்கு மாணவர்கள் நலனே முக்கியம்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு, பாடநூல், சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்டவற்றையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார். இதுபோன்ற அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுகக்கு பாடநூல், நோட்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
சனிக்கிழமையும் வகுப்புகள்:
இதற்கிடையில், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், இந்த பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்து.
அதில், மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் (ஜூன் 14) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க