மேலும் அறிய

அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் ஆண்டு விழா - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

TN GOVT. School: 37,576 அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்திட ரூ.14 கோடியே 93 லட்சத்து 97 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாட்டில் உள்ள 37,576 அரசு பள்ளிகளில் பிப்ரவரி-10 தேதிக்குள் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களின் திறமைகளையும் கற்றல் திறனையும் மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது பள்ளிகள். 2023- 2024 ம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையில்,” அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.” என்று அறிவிக்கப்பட்டது. 

அரசு பள்ளிகளில் சிலவற்றில் தலைமை ஆசிரியரின் ஆர்வத்தால் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. பிற பள்ளிகளில் ஆண்டு விழா நடைபெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு போதுமான அளவு நிதி இல்லாதது. எனவே அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, 

இந்நிலையில், ஆண்டு விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர்  மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “ ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு, அந்த மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் புற கல்விச் செயல்பாடுகளில் மாணவனின் சிறப்பான பங்களிப்பும் காரணமாக அமைகின்றன. கல்வியாண்டு முழுவதும் பள்ளியில் நிகழும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பினை, ஆண்டு இறுதியில் மாணவர்கள் அவர்கள் தம் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த நல்வாய்ப்பாக அமைவது பள்ளி ஆண்டு விழாவாகும். 

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடைபெற வேண்டும். மாணவர்களின் தனித்திறன்களை அவர் தம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக வெளிப்படுத்த ஏதுவாக அரங்கம் அமைத்து, சிறந்த ஒளி, ஒலி அமைப்பினை ஏற்படுத்தி ஆண்டு விழாவினை கொண்டாடிடப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் 37 ஆயிரத்து 576 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ரூ.14 கோடியே 93 லட்சத்து 97 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற பிப்ரவரி மாதம் 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவினை நடத்திட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் வாசிக்க..

Budget 2024 LIVE: மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Nainar Nagendran | ”மோதி பாக்கலாம் வா”அ.மலை Vs நயினார்! தமிழக பாஜக தலைவர் யார்? | BJPSaif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash KanojiaNitish Kumar Son Nishant Political Entry | மகனின் திடீர் அரசியல் ஆசைநிதிஷ் போடும் கணக்கு நெருக்கடியில் பாஜகDurai Murugan  | கண்டுகொள்ளாத திமுக தலைமை?வருத்தத்தில் துரைமுருகன்! மகன் கதிர் ஆனந்தின் எதிர்காலம்? | Kathir Anand

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
Simbu is MASS: சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
Trisha in TVK.?: 10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
Saif Ali Khan Case: வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்....
வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்...
Embed widget