மேலும் அறிய

Summer Holidays: தொடங்கிய கோடை விடுமுறை; பள்ளி மாணவர்கள் எப்படி பயனுள்ளதாக கழிக்கலாம்? இதோ ஐடியா!

Tamil Nadu School Summer Holidays 2025: செல்போன், இன்ஸ்டாகிராம் என குழந்தைகளை எளிதில் ஈர்க்கும் அம்சங்களில் இருந்து அவர்களை விலக்கி, வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்துவது சவாலாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை இன்று (ஏப்ரல் 18) முதல் தொடங்கியுள்ளது. விளாசி எடுக்கும் வெயில் நேரத்தில், மாணவர்களுக்குக் கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் எதையும் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளி விடுமுறை நாட்களில், வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு தங்களின் நேரத்தைச் செலவிடுவது சவாலான ஒன்றாக இருக்கும். செல்போன், இன்ஸ்டாகிராம் என குழந்தைகளை எளிதில் ஈர்க்கும் அம்சங்களில் இருந்து அவர்களை விலக்கி, வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்துவது பெற்றோர்களுக்கும் சவாலாக இருக்கிறது.

இந்த நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவிடுவது எப்படி என்று பார்க்கலாம்.

சொந்த ஊர் செல்லலாம்

பெரு நகரங்களில் படிக்கும் மாணவர்கள் கோடை விடுமுறையில், சொந்த ஊர்களுக்குச் செல்லலாம். தாத்தா- பாட்டி வீட்டிலும் உறவினர் வீடுகளிலும் கோடை விடுமுறை நாட்களைச் செலவிடலாம். கிணற்றில் நீச்சல், கிராம நண்பர்களுடன் கிரிக்கெட், தோட்டத்து விவசாயப் பணிகளில் உதவி, கோயில் திருவிழா, தாச்சாங்கல், பல்லாங்குழி, தாயம் என கிராமங்களில் நேரம் சிட்டாய்ப் பறக்கும்.

ஆனால் நகரத்திலேயே வசிக்கும் மாணவர்கள் தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன் தாண்டி யோசிப்பது சவால்தான். இந்த நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் எப்படிக் கழிக்கலாம் என்று பார்க்கலாம்.   

நீச்சல், நடன பயிற்சிகள்

கோடை விடுமுறைக்கென்றே சில தனியார் நிறுவனங்கள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. குறிப்பாக நீச்சல், நடனம் உள்ளிட்ட உடல் சார்ந்த பயிற்சி வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்கலாம்.

நீச்சல் பயிற்சி ஒருவருக்கு அடிப்படையாகத் தேவைப்படும் கலைகளில் ஒன்று. எனினும் நீச்சல் கற்பிக்கப்படும் குளங்களில் தரமான தண்ணீர், குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில் பயிற்சியாளர் உதவியுடன் மட்டுமே குழந்தைகள், நீச்சல் பயிலுவதையும் உறுதிசெய்ய வேண்டும். அதேபோல ஸ்கேட்டிங், ஷட்டில், பேட்மிண்டன், அத்லெட்டிக்ஸ் பயிற்சிகளிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

உள் அரங்க விளையாட்டுகள்

வெயிலில் வெளியே சென்று பயிற்சி எடுப்பது கடினமாக இருக்கிறது என்றால் உள் விளையாட்டுகளில் (Indoor Games) கவனம் செலுத்தலாம். மூளைக்கு வேலை கொடுக்கும் அபாகஸ், செஸ், கேரம்போர்டு வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்கலாம்.

மொழி ஆளுமையை வளர்க்க ஃபொனிக்ஸ் உச்சரிப்புப் பயிற்சி, ஸ்போக்கன் இங்க்லிஷ், இந்தி உள்ளிட்ட வகுப்புகளில் சேர்க்கலாம்.

ஆர்வம் இருக்கும் குழந்தைகளை அதற்கு ஏற்றவாறு நடனம், பரத நாட்டியம், ஓவியம், வீணை, கீபோர்டு ஆகிய வகுப்புகளில் சேர்க்கலாம்.

தற்காப்புக் கலைகள் தன்னம்பிக்கை அளிக்கும்

பெண் குழந்தைகளுக்கு சிலம்பம், கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் ஏதேனும் ஒன்றைக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கும். 

படிப்பில் பின்தங்கிய பாடங்களுக்கு சிறப்புப் பயிற்சி எடுக்க வைக்கலாம். எனினும் குழந்தைகளின் விடுமுறை பாதிக்காத வகையில் இருப்பது முக்கியம்.

சுற்றுலா செல்லலாம்

அதேபோல குழந்தைகளை காலை, மாலை நேரங்களில் கடற்கரைக்கு அழைத்துச் செல்லாம். பூங்காவுக்கு அழைத்துச் சென்று பறவைகள், செடிகளைக் காண்பிக்கலாம். அவை குறித்து எடுத்துக் கூறலாம். மேலும் புகழ்பெற்ற வரலாற்றுத் தலங்களுக்கு, சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று, உறவு முறை பற்றியும் உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் சொல்லிக் கொடுங்கள்.

Summer Holidays: தொடங்கிய கோடை விடுமுறை; பள்ளி மாணவர்கள் எப்படி பயனுள்ளதாக கழிக்கலாம்? இதோ ஐடியா!

கலக்கும் டிஐஒய்

வீட்டில் குழந்தைகளே செய்யும் வகையில் DIY (Do It Yourself) வகை பொருட்களை வாங்கிக் கொடுத்து, எளிமையான, சின்னச்சின்ன கிராஃப்டுகளை, அழகு சாதனப் பொருட்களை உருவாக்கச் சொல்லலாம்.

ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டும் வகையிலான புத்தகங்கள், புதிர்களை அவிழ்க்கும் நூல்கள், ஓவியங்கள் வரையும் நோட்டுகள் ஆகியவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.  

வாசிக்கக் கற்றுக் கொடுங்கள்

இவை எல்லாவற்றையும் தாண்டி மிக முக்கியமாக, வாசிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். பெற்றோர் செல்போனையும் தொலைக்காட்சியையும் பார்த்தால், குழந்தைகளும் அதையேதான் செய்வார்கள். குழந்தைகள் முன்பு புத்தகங்களை எடுத்து வாசித்தால், அவர்களுக்கும் வாசிப்பில் ஆர்வம் ஊற்றெடுக்கும்.

குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வகையில், படக் கதைகள், காமிக்ஸ், நன்னெறிக் கதைகள், சிறு கதைகள், குறு நாவல்களை வாசிக்க வைக்கலாம்.

வீட்டு வேலைகளைக் கற்றுக்கொடுங்கள்

எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்/ பெண் பாலினம் தவிர்த்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆபத்தில்லாத/ எளிமையான வீட்டு வேலைகளைக் கற்றுக் கொடுக்கலாம். நாம் செய்யும்போது உடன் அமர்த்தி, பேசிக் கொண்டே இணைந்து வேலைகளைச் செய்ய வைக்கலாம்.

வாண்டுகள் தங்களின் விடுமுறை நாட்களைக் குதூகலமாகக் கழிக்க வாழ்த்துகள்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget