Archaeology Museology: தொல்லியல் படிப்புகளை உதவித் தொகையுடன் படிக்கலாம்: அரசு அழைப்பு- விவரம்
அரசு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் 2023 - 2025ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான (Post Graduate Diploma Courses) மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
அரசு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் 2023 - 2025ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான (Post Graduate Diploma Courses) மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
முதுநிலைப் பட்டயப் படிப்புகளின் விவரம்- மாணவர் எண்ணிக்கை - கல்வித் தகுதி
* தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு - 20 ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் முதுநிலைப் பட்டம்
* கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு - 10 தமிழ் / இந்திய வரலாறு / வரலாறு / பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் / வரலாறு மற்றும் தொல்லியல் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம்
* மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு 10 இளங்கலை கட்டடப் பொறியியல் அல்லது மானுடவியல் / சமூகவியல் / வேதியியல் / இயற்பியல் / உயிரியல் / நிலவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம்
பயிற்று மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்.
உதவித் தொகை: ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் ரூ. 5,000. (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) உதவித் தொகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை
கீழ்க்காணும் பாடங்களில் இருந்த்100 பல் கொள்குறி வினாக்கள்கொண்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ், இலக்கியம், வரலாறு, தொல்லியல், அண்மைக்கால தொல்லியல் அழகாய்வுகள், கல்வெட்டியல், கட்டடக் கலை, சிற்பக் கலை, நாணயவியல், அருங்காட்சியகவியல், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்
எழுத்துத் தேர்வு நாள்: 23.07 2023 ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை
எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி மற்றும் மதுரை
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் தொல்லியல் துறையின் www.tnarch.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கல்வி சான்றிதழ்கள் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து, முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் https://tnarch.gov.in/sites/default/files/TNIAM%20Application%20form%20-%202023_5.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.tnarch.gov.in