மேலும் அறிய

TNEA Supplementary Counselling: பொறியியல் படிப்பு துணைக் கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

TNEA Supplementary Counselling 2024 Registration: துணைத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணாக்கர்கள்‌ மற்றும்‌ 2024 பொதுக்‌ கலந்தாய்வில்‌ கலந்து கொள்ளாதவர்களும்‌ விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்‌.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் துணைக் கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.

B.E., B.Tech., பொறியியல்‌ பட்டப் படிப்பு மாணாக்கர்‌ சேர்க்கைக்கான துணைக்‌ கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன்படி, தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை 2024- 25 பொதுக்‌ கலந்தாய்வின்‌ முடிவில்‌ நிரப்பப்படாமல்‌ உள்ள இடங்களுக்கு, 12- ஆம்‌ வகுப்பு பொது (அகாடமிக்) மற்றும்‌ தொழிற்‌ கல்வி (vocational) பயின்று சிறப்பு துணைத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தமிழ்நாட்டைச்‌ சார்ந்த மாணாக்கர்கள்‌ மற்றும்‌ 2024-பொதுக்‌ கலந்தாய்வில்‌ கலந்து கொள்ள இயலாத மாணாக்கர்களும்‌ கீழ்க்கண்ட இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்‌. குறிப்பாக, www.tneaonline.org, www.dte.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் இல்லாமலும் விண்ணப்பிக்கலாம்

இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌, தங்களின்‌ விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க ஏதுவாக, தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌ (TNEA Facilitation Centers (TFCs) அனைத்து மாவட்டங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளது. அதன்‌ விவரங்கள்‌ மேற்காணும்‌ இணையதளத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ளது.

OC/ BC/ BCM/ MBC & DNC - ரூ.500/-

SC/ ST / SCA -  ரூ.250

விண்ணப்பிப்பது எப்படி?

www.tneaonline.org, www.dte.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதிவுக்கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ Debit Card/ Credit Card/  Net Banking / UPI இணையதள வாயிலாக செலுத்தலாம்‌. இணையதள வாயிலாக பதிவுக்கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌, “The Secretary, TNEA” Payable at Chennai என்ற பெயரில்‌ 28.08.2024 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌ (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்‌.

இணையதள வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய ஆரம்ப நாள் - 28.08.2024

இறுதி நாள்‌ - 04.09.2024

மாணாக்கர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும்‌போதே அசல்‌ சான்றிதழ்களை இணையதளம்‌ வாயிலாக சரிபார்க்கும்‌ பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல்‌ சேக்கை சேவை மையத்தினை (TFC) தேர்வு செய்து கொள்ளவேண்டும்‌.

மேற்கண்ட அசல்‌ சான்றிதழ்களை இணையதளம்‌ வாயிலாக சரிபார்க்கும்போது ஏதேனும்‌ குறைபாடுகள்‌ கண்டறியப்பட்டால்‌, அந்த குறிப்பிட்ட மாணாக்கரின்‌ பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்‌ மற்றும்‌ மின்னஞ்சல்‌ முகவரிக்கு தகவல்‌ அனுபபப்பட்டு, குறிப்பிட்ட தேதி மற்றும்‌ நேரத்தில்‌ TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கலந்தாய்வு விவரங்கள்‌, வழிகாட்டி மற்றும்‌ கால அட்டவணையை மாணாக்கர்கள்‌ மேற்காணும்‌ இணையதளம்‌ வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்‌.

மேலும்‌ விவரங்களைப்‌ பெற தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்‌: 1800-425-0110

மின்னஞ்சல்‌: tneacare@gmail.com ‌

இவ்வாறு தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhar Update:  ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோVinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhar Update:  ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Emergency Medicine: எமர்ஜென்சி மருந்து பற்றி தெரியுமா? வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்ன?
Emergency Medicine: எமர்ஜென்சி மருந்து பற்றி தெரியுமா? வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்ன?
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா திட்டவட்டம்!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா திட்டவட்டம்!
அரசியலில் கால்பதிக்க தயாராகும் விவசாயிகள் - காரணம் இதுதான் 
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
Embed widget