மேலும் அறிய

TN 12th Result 2024: சென்னையை முந்திய செங்கல்பட்டு; தேர்ச்சி சதவீதத்தில் சாதனை - தேர்வு முடிவுகள் நிலவரம் என்ன ?

TN Plus Two Result 2024: செங்கல்பட்டு மாவட்டம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2.19 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது.  இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதியான இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 சதவிகிதம் ஆகவும், அரசு பள்ளிகளில் 91.32  சதவிகிதம், அரசு உதவி பெறும் பகுதிகளில் 95.49 சதவிகிதம் ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.58 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு காண முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இணைய வழி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in

ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 செங்கல்பட்டு மாவட்ட முடிவுகள்

இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 11,455 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதேபோன்று  13 ஆயிரத்து 787 மாணவிகள் தேர்வு எழுதினர். மொத்தமாக 25 ஆயிரத்து 742 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 10 ஆயிரத்து 632 மாணவர்களும்,  13 ஆயிரத்து  275 மாணவிகளும் மொத்தம் 23 ஆயிரத்து 907 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவர்களின் தேர்வு சதவீதம் 92.82 ஆக உள்ளது. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.29 ஆக உள்ளது. மொத்தம் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 94.71 ஆக உள்ளது.  

 சாதித்த செங்கல்பட்டு

கடந்த ஆண்டை விட செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 2.19 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கடந்த ஆண்டு விட மூன்று இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை  தமிழ்நாடு அளவில் பிடித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி செங்கல்பட்டு மாவட்டம் முன்னேறி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget