மேலும் அறிய
Advertisement
TN 12th Results: காஞ்சிபுரத்திலே ஒரே அரசுப்பள்ளி... 100 சதவீத தேர்ச்சி..! போராட்டத்திற்கு நடுவிலும் மாஸ் காட்டிய மாணவர்கள்..!
Tamil Nadu 12th Result: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்த நிலையிலும், படிப்பில் கவனத்தை செலுத்தி சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுக்கா, பரந்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய, விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 81 மாணவ மாணவிகள், பனிரெண்டாம் வகுப்பில் நான்கு பாடப்பிரிவுகளில் கல்வி கற்று வருகின்றனர். பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கிய பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கிராமப்புற மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்:
இந்நிலையில் பரந்தூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 81 மாணவ மாணவிகளும் படிப்பில் இருந்து கவனத்தை திசை திருப்பாமல் பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து கல்வி கற்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்தனர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற ஒரே அரசு மேல்நிலைப்பள்ளி எனும் பெருமையை பெற்று பள்ளியில் 45 மாணவிகள், 36 மாணவர்கள், என கல்வி பயின்ற 81பேரும் அதிக அளவில் மதிப்பெண்கள் எடுத்து முழுமையாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.
100 சதவீத தேர்ச்சி:
வணிகவியல் பாடத்தில் 6 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் ஒருவரும், வரலாறு பாடத்தில் 2பேரும், பொருளியல் பாடத்தில் ஒருவர் என நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக பள்ளியில் படித்து வந்த மாணவன் ஒருவர் 553 மதிப்பெண் பெற்று பள்ளியிலே முதலிடம் பெற்றுள்ளார். அந்த மாணவன் வணிகவியல் கணக்குப்பதிவியல் மற்றும் பொருளியல் ஆகிய மூன்று பாகங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்ற ஒரே அரசு மேல்நிலைப்பள்ளி எனும் பெருமையை, ஏற்படுத்திய பரந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் (kanchipuram) மாவட்ட முடிவுகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ மற்றும் மாணவிகளின் எண்ணிக்கை 13141. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 11935 . தேர்ச்சி சதவீதம் 90.82
தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை-6429 , தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 5561, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் - 86.50. தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை - 6712,தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 6374 ,தேர்ச்சி விகிதம் 94.96
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அரசு பள்ளி தேர்ச்சி விகிதம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 48 பள்ளி. 6847 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், தேர்ச்சி பெற்றவர்கள்- 5920, தேர்ச்சி விகிதம் 86.46.
பின் தங்கிய காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் இவ்வாண்டு 31 வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் மாநில அளவில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவித்திற்க்கு அடிப்படையிலும் காஞ்சிபுரம் மாவட்டம் 31 வது தர வரிசை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் மாவட்டத்தின் தரம் 28 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 31 ஆக குறைந்துள்ளது அதுவே கடந்தாண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் 27-வது இடத்தில் இருந்து 31-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
வெளியான தேர்வு முடிவுகள்
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.inwww.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion