TN 12th Result 2023 LIVE: 12ஆம் வகுப்பு மாணவர்களே.. மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
Tamil Nadu 12th Result 2023 LIVE Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
LIVE
Background
Tamil Nadu 12th Result 2023 LIVE
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதினர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாற்றப்பட்ட ரிசல்ட் தேதி
விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டு முதலில் மே 5ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தது. ஆனால் நேற்று ( மே 7) இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும், ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்தது.
வெளியான தேர்வு முடிவுகள்
அதன்படி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் கயல்விழி
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவராக அமைச்சர் கயல்விழி செல்வராஜ்-ஐ நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Breaking News LIVE :வங்கி கணக்குகளில் இருந்து ரூ.288 கோடி நூதன திருட்டு
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.288 கோடி நூதன முறையில் திருடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.
TN 12th Result 2023 LIVE: 12ஆம் வகுப்பு மாணவர்களே.. மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் மே 13 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN 12th Result 2023 LIVE: 600 க்கு 600.. அனைத்து பாடங்களிலும் 100 எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை..!
பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 600 மதிப்பெண் பெற்று நந்தினி மாணவி சாதனை அனைத்து பாடங்களிலும் 100 க்கு 100மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
TN 12th Result 2023 LIVE: கரூர் மாவட்டத்தில் தேர்ச்சி விவரம் என்ன..?
கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.31 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி.
4768 மாணவர்களும், 5436 மாணவிகள் என மொத்தம் 10,204 பேர் தேர்வு எழுதினர். இதில் 4385 மாணவர்கள், 5238 மாணவிகள் என மொத்தம் 9623 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.97 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.36 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.