மேலும் அறிய

TN 10th Result 2026: வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; 5 வழிகளில் காணலாம்- எவ்ளோ தேர்ச்சி?

Tamil Nadu 10th Result 2026: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், அதைக் காண்பது எப்படி என்று காணலாம்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 9.30 மணிக்கு வெளியாகி உள்ளன. இதில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகளை காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற்றன. குறிப்பாக முதல் நாளான மார்ச் 11 அன்று தமிழ் பாடத்துக்கான தேர்வும் 16ஆம் தேதி ஆங்கில பாடத்துக்கான தேர்வும் நடைபெற்றது. மார்ச் 25ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வும் 30ஆம் தேதி அறிவியல் தேர்வும் நடைபெற்றது. ஏப்ரல் 2ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடந்தது.

இவர்களுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் முழுமையாக நடந்து முடிந்து, மதிப்பெண்கள் கணக்கீடும் முடிந்துள்ளது. மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் நடைமுறையும் வெற்றிகரமாக நடந்துள்ளது.

வெளியான தேர்வு முடிவுகள்

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை சரியாக 9.30 மணிக்கு வெளியாகி உள்ளன. 

தேர்வை எழுதியவர்கள் 8,70,643 பேர். இதில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.5 % தேர்ச்சி அதிகம். இந்த ஆண்டும் மாணவர்களை விட , மாணவியர்கள் 4.32% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.   இதில் மாணவிகள் 96.47 சதவீதமும், மாணவர்கள் 92.15 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை (97.54%), தஞ்சை (97.41%), திருச்சி (97.31%), மற்றும் கன்னியாகுமரி (97.30%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நாளை (20.05.2026) புதன்கிழமை காலை 09.30 மணியளவில் 2025-2026 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்கக இணைய தளங்களில் காணலாம். எப்படி?

  1. குறிப்பாக மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
  2. இந்த இணைய முகவரியை க்ளிக் செய்து பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
  3. திரையில் தோன்றும் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
  4. மேலும் டிஜி லாக்கர் செயலி மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம். அதேபோல results.digilocker.gov.in என்ற இணைய முகவரியிலும் தேர்வு முடிவுகளைக் காணலாம்.

பள்ளிகளில் நேரடியாகப் பார்க்கலாம்

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் போல பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் முன்பதிவு செய்த மொபைல் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Whatsapp செயலி வழியாக...

வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் Hi" எனப் பதிவிட்டு பின்னர் (Directorate of Government Examinations) தேர்வர்களின் வகுப்பினை தெரிவு செய்தால் தொடர்வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பினால், தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம்.

இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் Whatsapp செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

முன்னதாக மே 8ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தத் தேர்வை 7,91,654 மாணவ- மாணவிகள் எழுதி இருந்த நிலையில், மொத்தம் 7,53,694 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். அதாவது 95.20 சதவீத தேர்ச்சி பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget