மேலும் அறிய

TN 10th Result 2026: தனியார் பள்ளிகளை அலறவிட்ட மகளிர் பள்ளிகள் - ஆண்கள் நிலவரம்? - SSLC ரிசல்ட் விவரங்கள்

Tamil Nadu 10th Result 2026 School Wise: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகிதத்தில் ஆடவர் பள்ளிகள் கடைசி இடத்தை பிடித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகித அடிப்படையில் தனியார் பள்ளிகள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:

அரசு தேர்வுகள் இயக்கம் நடத்திய 2025-26 கல்வி ஆண்டிற்கான, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். அதன்படி, தேர்வெழுதிய 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 பேரில், 94.31 சதவிகிதம் அதாவது 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். அதிகபட்சமாக மாணவியர்கள் 96.47 சதவிகிதமும், மாணவர்கள் 92.15 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவிகளை காட்டிலும் மாணவர்களின் தேர்ச்சி கிதம் 4.32 சதவிகிதம் அதிகமாக உள்ளது. 11 ஆயிரத்து 174 பேர் தேர்வு எழுத தகுதி பெற்று இருந்தும், வராமல் தவிர்த்துள்ளனர். இந்நிலையில் பள்ளிகள் வாரியாக பதிவாகியுள்ள தேர்ச்சி விகிதங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஆடவர் பள்ளிகள் கடைசி இடம்:

பள்ளிகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தனியார் சுயநிதி பள்ளிகள் 98.14 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளன. அதேநேரம், பெண்கள் பள்ளிகள் 96.42 சதவிகித தேர்ச்சியையும், இருபாலர் பள்ளிகள் 94.42 சதவிகிதமும் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அதாவது தனியார் பள்ளிகளுக்கும், முழுமையான மகளிர் பள்ளிகளுக்கும் இடையேயான தேர்ச்சி விகித வேறுபாடு வெறும் 1.72 சதவிகிதம் மட்டுமே ஆகும். இந்த பட்டியலில் 88.50 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் ஆண்கள் பள்ளிகள் கடைசி இடத்தை பிடித்துள்ளன. அதாவது பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.92 சதவிகிதம் அதிக தேர்ச்சியை பெற்றுள்ளன. இருபாலரும் பயிலும் பள்ளிகளுடன் ஒப்பிட்டால் ஆண்கள் மட்டுமே பயிலும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 5.92 சதவிகிதம் குறைவாகும்.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

வ. எண் பள்ளி வகைகள் தேர்ச்சி சதவிகிதம்
1 அரசுப் பள்ளிகள் 91.86%
2 அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 94.34%
3 தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.14%
4 இருபாலர் பள்ளிகள் 94.42%
5 மகளிர் பள்ளிகள் 96.42%
6 ஆண்கள் பள்ளிகள் 88.50%

பள்ளிகளின் தேர்ச்சி விகிதங்கள்:

  • தேர்வெழுதிய மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை - 12,467
  • மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 7,490
  • உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 4,977
  • 100% தேர்ச்சி பெற்ற மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை -5,171
  • 95% தேர்ச்சி பெற்ற மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை - 8,233
  • 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை - 1,931
  • 95% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை -3,463

இதையும் படியுங்கள்: TN Cabinet: இஸ்லாமியர், ரசிகர் மன்ற நிர்வாகிகள், டெல்டாக்காரர் - CM விஜயின் புதிய அமைச்சரவை பட்டியல் ரெடி?

சதமடித்து சாதித்த மாணவர்கள்:

2025-26 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், ஒட்டுமொத்தமாக 17 ஆயிரத்து 132 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர். அதிகபட்சமாக அறிவியல் படத்தில் 10 ஆயிரத்து 476 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக தமிழில் 34 பேர் மட்டுமே முழு மதிப்பெண்களை எடுத்துள்ளனர். ஏதேனும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண்களை பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 774 ஆக பதிவாகியுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget