TN Cabinet: இஸ்லாமியர், ரசிகர் மன்ற நிர்வாகிகள், டெல்டாக்காரர் - CM விஜயின் புதிய அமைச்சரவை பட்டியல் ரெடி?
TN Cabinet CM Vijay: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தில், 10 முதல் 12 தவெக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

TN Cabinet CM Vijay: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தில், அதிமுகவினர் இடம்பெற வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை அமைச்சரவை விரிவாக்கம்?
முதலமைச்சர் விஜய் உடன் அமைச்சரவை பதவியேற்றுக்கொண்ட 9 பேருக்கு அண்மையில் தான், இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இன்று சென்னை வரும் நிலையில், நாளை தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தவெக தரப்பில் இருந்து 10 முதல் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற உள்ளனராம். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதன் படி, இரண்டு அமைச்சரவை பதவிகளும் நாளை பூர்த்தி செய்யப்பட உள்ளனவாம். அதேநேரம், அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவாக வாக்களித்த, அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் பதவி வழங்க வாய்ப்பில்லையாம். சர்ச்சைகள் மற்றும் குதிரைபேர புகார்களை தடுக்கும் விதமாக, தவெக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாம்.
10-12 தவெக எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு..
அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகாக்களை ஒதுக்குவதில் நிலவும் தாமதம் போன்றவை, முக்கிய கோப்புகளின் முன்னேற்றத்தை தடுக்கின்றன. பொதுமக்களுக்கான திட்டங்களுக்கு பெரிய முட்டுக்கட்டையாகவும் அமைந்துள்ளன. இதனையடுத்து அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பணிகளை விஜய் முடுக்கிவிட்டுள்ளாராம். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சமூகத்தினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில், பட்டியல் தயாராகி வருகிறதாம். இதுதொடர்பான ஆவணங்களை இன்று ஆளுநரிடம் வழங்கி, நாளை பதவியேற்பு விழா நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் ரசிகர் மன்ற நிர்வாகிகள்?
கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட புதிய அமைச்சர்களுக்கான பட்டியலில் இஸ்லாமியர், விஜய் ரசிகர் மன்றத்தில் நீண்டகாலமாக உள்ள நிர்வாகிகள், கல்விப் பணியில் ஈடுபட்டு வருபவர்கல் மற்றும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் உள்ளிட்டோருக்கு வாய்ப்புகள் உள்ளதாம். அதன்படி வெளியாகியுள்ள தகவலின்படி, நீண்டகால ரசிகர்மன்ற நிர்வாகிகளான மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கல்லணை, சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏவான தமிழ் பார்த்திபன் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரான மொஹமது ஃபர்வாஸ் எனப்படும் பர்வீஸ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாம்.
அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பு?
மேற்குறிப்பிட்டவர்கள் போக, தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் ஆகியோரும் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாம். சென்னையில் இருந்து மட்டுமே தற்போது 5 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், பிராந்தியங்களுக்கான பிரதிநிதித்துவமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். பெண்களுக்கான வாய்ப்பை கருத்தில் கொண்டால் நிதியமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவு பெற்ற திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரான சத்யபாமா பெயர் பரிசீலனையில் உள்ளதாம். இதுபோக பல்லாவரம் எம்.எல்.ஏ., காமாட்சி, எம்.எல்.ஏ., விஜயலட்சுமி ஆகியோரின் பெயர்களும் அமைச்சர் பட்டியலில் இடம்பெறலாம் என தெரிகிறது.
காங்கிரசுக்கான 2 இடங்கள்:
கூட்டணி அமைக்கும்போது காங்கிரசுக்கு 2 அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும் என தவெக உறுதி அளித்துள்ளது. அதன்படி, ராஜேஷ்குமார், தாரகை மற்றும் விஸ்வநாத் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளனவாம். அவர்களில் இருவருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படலாம் என்றும், உயர்கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய இலாகாக்கள் காங்கிரசுக்கு ஒதுக்கப்படலாம் என்றும் சத்யமூர்த்தி பவன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Before You Go
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
ட்ரெண்டிங் செய்திகள்






















