TN 10th Result 2025: அடித்து தூள் கிளப்பிய அரசுப் பள்ளி ! விழுப்புரம் தேர்ச்சி எவ்வளவு தெரியுமா?
Villupuram 10th Result 2025: ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 15வது இடத்தினை பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டத் தேர்ச்சி ( Villupuram 10th Result )
விழுப்புரம் மாவட்டத்தில் 62 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டம்
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளது. 3ஆம் இடத்தில் தூத்துக்குடி மாவட்டமும், அடுத்தடுத்த இடங்களில் முறையே கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களும் பெற்றுள்ளன.
வழக்கமாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் முதலிடங்களைப் பெறும். எனினும் இந்த முறை கொங்கு மண்டலம் கோட்டை விட்டுள்ளது.
கடைசி இடத்தில் வட மாவட்டங்கள்
இதில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் பின்தங்கிய இடங்களில் தொடர்ந்து நீடிக்கின்றன. குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் 33ஆவது இடத்தில் 91.3 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. சென்னை 34ஆவது இடத்திலும் செங்கல்பட்டு மாவட்டம் 35ஆவது இடத்திலும் உள்ளன. இவர்களின் தேர்ச்சி விகிதம் முறையே 90.73 மற்றும் 89.82 ஆக உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் 36ஆவது இடத்திலும் கள்ளக்குறிச்சி 37ஆம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டிலேயே கடைசியாக வேலூர் மாவட்டம், 85.44 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறையே காரணம் என்று குற்றச்சாட்டு பரவலாகக் கூறப்படுகிறது.





















