மேலும் அறிய

NEET training: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக நீட் பயிற்சி வகுப்பு: அன்புமணி வலியுறுத்தல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை உடனே தொடங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை உடனே தொடங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்கள் நிறைவடைந்தும் பயிற்சி வகுப்பு தொடங்காதது பற்றி அவர் கவலை எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

''தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில்,  அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மருத்துவம் படிக்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை இந்த அளவுக்கு தாமதம் செய்வது கவலையளிக்கிறது

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அதனால்தான் நீட் தேர்வை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில் நீட் விலக்கு என்ற இலக்கை எட்டும் வரை அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த இரு நிலைகளுக்கும்  எந்த முரண்பாடும் இல்லை. நீட் தேர்வு நடைமுறையில் இருக்கும் வரை அத்தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டியது அரசின் கடமை.

தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்கள் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி நீட் தேர்வுக்கான பயிற்சி பெறும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அதைக் கருத்தில் கொண்டுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு நடப்பாண்டில் இன்னும் தொடங்கப்படவில்லை; அதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை.

6 மாதங்கள் வரை நீட் பயிற்சி

வழக்கமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நீட் பயிற்சி தொடங்கும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை மட்டும்தான் பயிற்சி அளிக்கப்படும். தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி ஓராண்டு முதல் இரு ஆண்டுகள் வரை வழங்கப்படும் நிலையில், அதனுடன் ஒப்பிடும் போது அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி போதுமானதல்ல.  ஆகஸ்ட் மாதம் பயிற்சி வகுப்புகளை தொடங்கினாலே அது போதுமானதாக இருக்காது எனும் சூழலில், நவம்பர் மாதம் பிறந்தும் கூட பயிற்சி வகுப்புகளை தொடங்கவில்லை என்றால் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் நீட் தேர்வில் எவ்வாறு வெற்றி பெற முடியும்?

கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் டிசம்பர் மாதம் வரை நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. அதனால், கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 17 ஆயிரத்து 972 அரசு பள்ளி மாணவர்களில் 5,132 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு எழுதிய 12,840 பேரில் 4,447 பேர்  மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் இது 24.72 விழுக்காடு மட்டும் தான். ஆனால், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை விட அதிகமாக 29.56% மாணவர்கள்  நீட் தேர்வை எதிர்கொள்ளும் துணிச்சல் கூட இல்லாமல் புறக்கணித்து விட்டனர். அதற்கு காரணம், நீட் தேர்வை எதிர்கொள்ளும் நம்பிக்கையை பெறும் அளவுக்கு பயிற்சி வழங்க அரசு தவறி விட்டதுதான்.


NEET training: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக நீட் பயிற்சி வகுப்பு: அன்புமணி வலியுறுத்தல்

பள்ளிகள் திறந்து 5 மாதம்

மார்ச் மாதம் 13-ஆம் தேதி  பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. அதற்கு முன்பாக செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், ஜனவரி மாதத்திற்கு பிறகு மாணவர்களின் கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். அதனால், ஏற்கனவே நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு இருந்தாலும் கூட, அது போதுமானதாக இருக்காது. பள்ளிகள் திறந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படாதது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது; அதனால் அவர்களுக்குக் குறைந்தது 500 இடங்கள் கிடைத்து விடும் என்பதாலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்குவதில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது. 7.5%  ஒதுக்கீடு தவிர மீதமுள்ள பொதுப்போட்டி பிரிவுக்கான இடங்களையும் கைப்பற்றும் அளவுக்கு அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். அதில்தான் பள்ளிக் கல்வித்துறையின் வெற்றி அடங்கியிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை  உடனடியாக தொடங்க வேண்டும். அத்துடன் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

VIT Vellore: ''இந்தியா செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நாடாக மாற வேண்டும்''-டெல்லி முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தல்
''இந்தியா செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நாடாக மாற வேண்டும்''-டெல்லி முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தல்
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
செழிப்பான இந்தியாவுக்கு: தொடக்கக் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கல்வி குரல்!
செழிப்பான இந்தியாவுக்கு: தொடக்கக் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கல்வி குரல்!
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget