தென்னிந்திய அறிவியல் கண்காட்சி 2026: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு- விவரம்!
இம்மண்டல நிகழ்வு 1981 -1982 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்டு சுழற்சி அடிப்படையில் நடத்தப்படுகின்றது.

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி என்பது அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வருடாந்திர நிகழ்வாகும். அனைத்து 6 தென்னிந்திய மாநிலங்களும் பல்வேறு அறிவியல் கருப்பொருள்களில் கண்காட்சிகளுடன் பங்கேற்கின்றன. பங்கேற்றவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப்படும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றிப் பெற்றவர்களாவர்.
6 தென்னிந்திய மாநிலங்கள்
SISF அருங்காட்சியகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு 6 தென்னிந்திய மாநிலங்களையும் ஒருங்கிணைத்து கண்காட்சியில் பங்கேற்கின்றனர். இம்மண்டல நிகழ்வு 1981 -1982 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்டு சுழற்சி அடிப்படையில் நடத்தப்படுகின்றது.
இந்த ஆண்டு SCERT தெலுங்கானா, SISF - 2026 ஜனவரி - 2026 இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடத்திட ஒப்புக்கொண்டுள்ளது. சரியான இடம் மற்றும் அட்டவணை சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி 2026 – க்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 3 வெவ்வேறு வகைகளில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் இருந்து அதிகபட்சம் (35) முப்பத்தைந்து கண்காட்சிகள் தேர்ந்தெடுக்கவும். 8 முதல் 10 வகுப்பு பங்கேற்க தகுதியுடையவர்கள் முடிய படிக்கும் மாணவர்கள் மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தனிப்பட்ட வகை (ஒரு மாணவர் + ஒரு ஆசிரியர் ) = 15 கண்காட்சிகள்
- குழு வகை (2 மாணவர்கள் + ஒரு ஆசிரியர் ) =10 கண்காட்சிகள்
- ஆசிரியர் வகை ( ஒரு ஆசிரியர் மட்டும்) = 10 கண்காட்சிகள்
இக்கண்காட்சியானது பின்வரும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், சுற்றுச் சூழல் அறிவியல், பொறியியல், உயிரியியல் / உயிர் வேதியியல் மற்றும் கணினி அறிவியல்.
மாவட்ட அளவில் கண்காட்சி
மேற்கண்ட விதிகளின்படி மாவட்ட அளவில் 15-11-2025 அன்று கண்காட்சி நடத்தவும், அதில் வெற்றிப் பெற்றவர்களில் முதலிடம் பெற்ற மாணவ / மாணவிகள் மட்டும் மாநில அளவில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் பங்கேற்க இயலும் என்பதையும் மாநில அளவிலான கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.






















