மேலும் அறிய

கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பாடப்புத்தகங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் சில அரசியல் தலைவர்கள் குறித்த பாடப்பகுதிகள் இந்த புதிய திருத்தத்தில் நீக்கப்படுமா?

பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. 

தமிழக பள்ளிக்கல்விப் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்தும், காலத்துக்கு ஏற்ற புதிய பாடங்களைச் சேர்ப்பது குறித்தும் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று (21.07.2026) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், பாடத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு குழுவைச் சேர்ந்த முக்கிய கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் நாராயணன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றன. 

கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய விவரங்கள்

தற்போதைய காலச் சூழலுக்குப் பொருந்தாத சில பழைய பாடப்பகுதிகளை முழுமையாக நீக்கிவிட்டு, மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பயனுள்ள வகையிலான புதிய பாடங்களைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. அதேபோல 6 முதல் 10ஆம் வகுப்பு வரையான பாடத்திட்ட வரைவு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. 

நவீன தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாக புதிய பாடத்திட்டத்தின் வடிவமைப்பு அமைய உள்ளது. குறிப்பாக ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகியவை குறித்த அறிமுகம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில், மாநிலப் பாடத்திட்டத்தை விரிவுபடுத்த வல்லுநர் குழு ஆலோசிக்க உள்ளது.

பாடங்களில் செய்யப்பட உள்ள திருத்தங்கள் மட்டுமின்றி, புதிய வடிவமைப்புடன் அச்சிடப்பட உள்ள பாடப்புத்தகங்களின் அச்சுச் செலவினங்கள் மற்றும் அவற்றின் விலை நிர்ணயம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் பாடங்கள் நீக்கம்?

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பாடப்புத்தகங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் சில அரசியல் தலைவர்கள் குறித்த பாடப்பகுதிகள் இந்த புதிய திருத்தத்தில் நீக்கப்படுமா என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எப்போது சேர்க்கப்பட்டது?

திமுக ஆட்சியில் 9ஆம் வகுப்பு புத்தகத்தில், செம்மொழி நிலை, தமிழ்மொழிக்குக் கிடைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த பாடம் சேர்க்கப்பட்டது. 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இந்த பாடம் சேர்க்கப்பட்டு, வழங்கப்பட்டது. தொடர்ந்து 10ஆம் வகுப்புப் புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றது. இதில், ''பன்முகக் கலைஞர்'' என்ற தலைப்பில் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டது. 

தொடர்ந்து 8ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றது. குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில், குடிமையியல் பாடத்தில் பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வட இந்தியாவில் எகிறும் விஜய் செல்வாக்கு! வாக்குளாக மாற்ற காங்கிரஸ் வியூகம்?
CM Vijay: வட இந்தியாவில் எகிறும் விஜய் செல்வாக்கு! வாக்குளாக மாற்ற காங்கிரஸ் வியூகம்?
EPS-ஐ பாதுகாக்க வகுத்த விதி.! தங்களுக்கே ஆப்பாக மாறியதால் அலறும் CVS, SPV - அதிமுகவில் நடப்பது என்ன.?
EPS-ஐ பாதுகாக்க வகுத்த விதி.! தங்களுக்கே ஆப்பாக மாறியதால் அலறும் CVS, SPV - அதிமுகவில் நடப்பது என்ன.?
DMK: பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
விஜய்கிட்ட சொல்லட்டா.. பணம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!
விஜய்கிட்ட சொல்லட்டா.. பணம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
Embed widget