மேலும் அறிய

Re NEET 2026: நீட் மறு தேர்வு; மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பை அறிவித்த NTA- கால அவகாசம் நீட்டிப்பு!

Re NEET 2026 duration: நீட் மறு தேர்வு: மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் கூடுதல் அவகாசத்தை அறிவித்த தேசியத் தேர்வுகள் முகமை/

நீட் தேர்வுக்காலம் 3 மணி நேரத்திற்கு பதிலாக 3.15 நிமிடமாக நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் 2026-ம் ஆண்டிற்கான நீட் மறு தேர்வுக்கான ஏற்பாடுகள் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இம்முறை தேர்வில் ஒரு முக்கிய மாற்றமாக, வினாத்தாள்களைப் படித்துப் பார்த்துப் புரிந்துகொள்ள மாணவர்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கும் நோக்கில், தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் 15 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 195 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

கணக்கீட்டு தாள்கள் எண்ணிக்கை

மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நீட் தேர்வு நடக்க உள்ளது. அதேபோல ரஃப் கணக்கீட்டு வேலைகளுக்காக அளிக்கப்பட்டு வந்த 2 பக்கங்கள், 4 பக்கங்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் முதல் 2 பக்கங்கள் வினாத்தாளின் முதலிலேயேயும் அடுத்த இரு பக்கங்கள் கடைசியிலும் அளிக்கப்பட உள்ளது. 

கடந்த முறை போன்று அல்லாது, எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராத வகையில், இம்முறை கடுமையான மற்றும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர பாதுகாப்பு நடவடிக்கை

ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் எந்தவிதத் தவறுக்கும் இடமளிக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் பல கட்டங்களாக நடக்கும் தீவிர சோதனைக்குப் பிறகே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் எப்போது?

நீட் மறு தேர்வுக்கான தேர்வு மைய விவரம் வெளியான நிலையில், ஹால் டிக்கெட் (Admit Card) எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான பிரத்யேக டவுன்லோட் லிங்க் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களது நுழைவுச்சீட்டை எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஹால் டிக்கெட் அதிகாரப்பூர்வமாக வெளியானவுடன், அதில் இடம்பெற்றுள்ள தேர்வு மையத்தின் முகவரி, தேர்வு நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை மாணவர்கள் கவனமாகப் படித்துப் பின்பற்ற வேண்டும்.

இதுதொடர்பான விவரங்களை http://www.nta.ac.in/Download/Notice/Notice_20260612114428.pdf  என்ற இணைப்பில் காணலாம். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Embed widget