மேலும் அறிய

No Book Bag Day: புதுச்சேரியில் புத்தகப் பை இல்லா தினம் கொண்டாட்டம்; உத்தரவைக் கடைப்பிடிக்காத தனியார் பள்ளிகள்!

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட கல்விக் கொள்கையில் "புத்தகப்பை இல்லா தினம்" கடைபிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட கல்விக் கொள்கையில் "புத்தகப்பை இல்லா தினம்" கடைபிடிப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி புதுச்சேரியில் கடந்த 27-ந் தேதி அனைத்து பள்ளிகளும் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தகப் பை இல்லாத தினத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அன்றைய தினம் பள்ளிகளில் கைவினை, வினாடி வினா, விளையாட்டு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், மாதத்தின் கடைசி நாள் விடுமுறை தினமாக இருக்கும் பட்சத்தில் முந்தைய வேலை நாளை புத்தக பையில்லா தினமாக பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஜூலை மாதத்தின் கடைசி வேலை நாளான இன்று திங்கட்கிழமை புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகப்பை இன்றி பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இதனால் இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி கைகளை வீசியபடி மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்தல் விளையாட்டு, கலை நிகழ்ச்சி, வினாடி வினா, விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அரசின் கல்வித்துறை உத்தரவில் தனியார் பள்ளிகளும் புத்தகப் பையில்லா தினத்தை கடைபிடிக்கும் படி தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளியில் இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் வழக்கம் போல் இன்று புத்தகப்பையுடன் பள்ளிக்கு சென்றனர். சில தனியார் பள்ளிகளில் இன்று ஏற்கனவே திட்டமிட்டபடி மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Mahindra Thar OG: தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Embed widget