மேலும் அறிய

தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!

எல்லா துறையிலும் கட்சி நிதி என்ற ஒன்று இருந்தது உண்மை தான். கல்வித்துறையில் குறைந்தது ரூ.1 லட்சம் தொடங்கி தடையில்லா சான்றிதழ் பெற ரூ.25 லட்சம் வரை கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ் ஆகியவை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தனியார் பள்ளி கூட்டமைப்பினர் முந்தைய திமுக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்தனர். அவர்கள் பேசுகையில், “தமிழ்நாட்டில் செயல்படும் 1000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீக்காரம் கடந்த 2 ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணைப்படி,  அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் அத்தனை பள்ளிகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

இதில் குறிப்பாக சிபிஎஸ்இ  பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ரூ.25 லட்சம் செலவு செய்தால் தான் அந்த சான்றிதழ் கிடைக்கும். இதற்காக ஒவ்வொரு துறையையும் அணுகி அனுமதி பெற கடுமையாக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

ஆனால் தற்போது அந்த பிரச்னைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ரூ.1 கூட செலவு செய்யாமல் நடைபெற்றுள்ளது வரலாற்று நிகழ்வாகும். கல்வித்துறையில் இதுபோன்று நடந்தது இல்லை. அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தடையில்லா சான்றிதழ், தொடர் அங்கீகாரம் பெற அலைய வேண்டிய தேவையை ஏற்படுத்தாமல் நடவடிக்கை எடுத்தார். தற்போது தவெக ஆட்சியில் அமைச்சர் ராஜ்மோகன் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர். 

தொடர்ந்து பேசிய அவர்கள், “ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் கல்விக் கட்டணம் என்பது அதற்கென அமைக்கப்பட்ட கமிட்டியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை நீங்கள் ஆன்லைனிலும் பார்க்கலாம். அமைச்சர் ராஜ்மோகனும் தனியார் பள்ளிகளின் செயல்பாட்டை பாராட்டி, அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். அதேசமயம் ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை விடுத்தார். கண்டிப்பாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அதுதொடர்பாக ஆலோசனை செய்து எந்தளவுக்கு சாத்தியப்படுத்தலாம் என்பதை தெரிவிப்போம். 

Also Read: உயிரியல் பூங்கா உங்க அப்பன் வீட்டு சொத்தா? .. தத்தி முதல்வர் விஜய்.. சரமாரியாக திமுக விமர்சனம்!

எல்லா துறையிலும் கட்சி நிதி என்ற ஒன்று இருந்தது உண்மை தான். கல்வித்துறையில் குறைந்தது ரூ.1 லட்சம் தொடங்கி தடையில்லா சான்றிதழ் பெற ரூ.25 லட்சம் வரை கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் அங்கீகாரம் பெறுவதில் கால தாமமும் அதிகாரிகளால் செய்யப்பட்டது. அங்கீகாரம் இல்லாமலேயே நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டோம். இவ்வாறு பணம் கொடுக்காமல் இருப்பதால் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் கிடைப்பார்கள். அவர்களின் சம்பளம் அடிப்படையில் தான் கல்வி கட்டணம் உள்ளிட்ட செலவுகள் கட்டமைக்கப்படுகிறது. செலவுகள் குறைந்துள்ளதால் அமைச்சரின் கோரிக்கைகளையும் நாங்கள் பரிசீலிப்போம் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget