மேலும் அறிய

’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்

புதுக்கோட்டையில் விடுதிகளில் பட்டியலின மாணவிகளுக்கு சோறு, ஊறுகாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’புதுக்கோட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சமூகநீதி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவிகளுக்கு கடந்த இரு மாதங்களாக மூன்று வேளையும் வெறும் சோறும், ஊறுகாயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், தங்களுக்கு குறைந்தபட்சம் உண்ணத் தகுந்த உணவு வழங்க வேண்டும் என்று கோரி அந்த விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள் கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருவதாகவும் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பட்டியலின மாணவிகளுக்கு உணவு வழங்குவதற்கு கூட துப்பில்லாத நிலையில் திமுக அரசு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

டிசம்பருக்குப் பிறகு நிதி வழங்கவில்லை..

புதுக்கோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை சமூகநீதி விடுதிக்கு மாணவிகளின் உணவுக்காக வழங்கப்படும் நிதி கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் அரிசி, எரிவாயு சிலிண்டர் ஆகியவை மட்டுமே இருப்பதால் அதைக் கொண்டு, கடந்த இரு மாதங்களாக வெறும் சோறு மட்டும் வடித்து தங்கள் சொந்த செலவில் ஊறுகாய் அல்லது சிப்ஸ் வாங்கி மாணவர்களுக்கு வழங்குவதாகவும் விடுதி பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  திமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புரதச் சத்து, காய்கறிகள் என சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி மாதத்தில் 4 நாள்கள் அசைவ உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் இவை அனைத்தும் ஏட்டளவில்தான் உள்ளன.

வெறும் சோறு மட்டுமேவா

காய்கறிகள் வாங்கி பருப்பு குழம்பு வைத்து மாணவ, மாணவியருக்கு பரிமாறுவதற்கு கூட நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதனால்தான் பட்டியலின மாணவிகளுக்கு வெறும் சோறு மட்டுமே வழங்கப்படும் அவலம் நிலவுகிறது.

புதுக்கோட்டை சமூகநீதி விடுதியில் மட்டும்தான் இந்த நிலை என்றில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலைதான்  காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்லூரி மாணவ, மாணவியருக்கு  ஒரு மாதத்திற்கு உணவு வழங்குவதற்காக  ரூ.1500, அதாவது தினமும்  ரூ.50 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதிலும் ஒரு குறிப்பிட்ட தொகை அதிகாரத்தில் இருப்பவர்களால் சுரண்டப்படுகிறது. இந்தத் தொகை சுமாரான உணவு வழங்குவதற்கே போதுமானதல்ல என்று கூறப்படும் நிலையில், அது கூட வழங்கப்படாவிட்டால் பட்டியலின மாணவ, மாணவியருக்கு எவ்வாறு உணவு வழங்க முடியும்? என்பதை விடியா அரசுதான் விளக்க வேண்டும்.

ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே


பட்டியலின மாணவ, மாணவியர் விடுதிக்கு நிதி ஒதுக்காத கொடுமை இப்போதுதான் நடைபெறும் ஒன்றல்ல.  திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே இந்தக் கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது.  இதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். பட்டியலின மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களின் நலனில் சிறிதும் அக்கறைக்காட்டவில்லை.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு 4 மாதங்களுக்கும் மேலாக உணவுப்படி வழங்கப்படவில்லை. அதனால், அதன் வார்டனாக பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர் மகேந்திரன் என்பவர் சொந்தக் காசை செலவழித்து மாணவர்களுக்கு உணவு வழங்கி வந்தார்.

தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்

நிலுவையில் உள்ள உணவுப்படியை வழங்கும்படி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் அவர்கள் பணம் ஒதுக்கீடு செய்யாததாலும்,  தம்மை மீண்டும் ஆசிரியர் பணிக்கே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததாலும் கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பணியாற்றும் பலரும் தங்களின் சொந்தப் பணத்தை செலவழித்து விட்டு, அது மீண்டும் கிடைக்குமா? என்ற மன உளைச்சலில்தான் உள்ளனர்.

திமுக ஆட்சியில் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக விடுதிகளின் பெயரை சமூகநீதி விடுதிகள் என்று பெயர்மாற்றம் செய்யும் வேலை மட்டும் தான் நடந்தது. ‘பேரு வச்சியே சோறு வச்சியா’ என்ற திரைப்பட அவல நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாகத்தான் திமுக ஆட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சமூகநீதி நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமின்றி, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் சீரழிந்து கொண்டுதான் இருக்கின்றன. வளர்ச்சியில் யாரையும் பின் தங்க விட மாட்டோம் என்று வசனமெல்லாம் பேசும் முதலமைச்சரின் ஆட்சியில், அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் சகிக்க முடியாதவையாக உள்ளன.  

"ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்" என்பதைப் போலத்தான் திமுக ஆட்சியும் உள்ளது. அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அன்புமணி சாடி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget