மேலும் அறிய

JEE Main Answer Key: ஜேஇஇ மெயின் தேர்வு Answer Key வெளியீடு; டவுன்லோடு செய்வது எப்படி?

JEE Main Answer Key: ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வுக்கான Answer Key-ஐ தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வுக்கான Answer Key-ஐ தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதை டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு  கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்தத் தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜூன் 20 முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது அமர்வு (session 2) ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான Answer Key-ஐ தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதை டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம். 


JEE Main Answer Key: ஜேஇஇ மெயின் தேர்வு Answer Key வெளியீடு; டவுன்லோடு செய்வது எப்படி?

தேர்வர்கள்  https://examinationservices.nic.in/jeemain22/root/DownloadAdmitCard.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFVj34FesvYg1WX45sPjGXBr6zOap+YI3RfHX0uXZk7IA என்ற இணைப்பை க்ளிக் செய்யவேண்டும். 

அதில், விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பதிவிட்டு விடைக் குறிப்பைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டும் Answer Key-ஐ சரிபார்த்துக் கொள்ளலாம். 

ஆட்சேபனை தெரிவிக்கலாம்

ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்பில் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். எனினும் ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.200 தொகையைச் செலுத்த வேண்டும். இந்தத் தொகை திரும்ப அளிக்கப்படாது என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு: 011-40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இ- மெயில் முகவரி: jeemain@nta.ac.in

*

ALSO READ | Engineering College Rank List: எந்தக் கல்லூரி டாப்? - 481 பொறியியல் கல்லூரி தரவரிசையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
Embed widget