NEET UG Result: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், www.nta.ac.in and https://neet.nta.nic.in என்ற இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதிக்கப்பட்டிருந்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடை விதித்த உச்சநீதிமன்றம் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு தடை இல்லை என்றும் உத்தரவிட்டது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெற்றது.
#BREAKING | நீட் -2021 நுழைவுத் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை - உச்சநீதிமன்றம்https://t.co/wupaoCQKa2 | #NEETUG2021 | #NEET | #SupremeCourt pic.twitter.com/yn2AkxKTVA
— ABP Nadu (@abpnadu) October 28, 2021
முன்னதாக, மகாராஷ்டிரா தேர்வு மையத்தில், தேர்வு தொடங்குவதற்கு முன்பாக வைஷ்ணவி போபாலி, அபிஷேக் சிவாஜி ஆகிய இரண்டு மாணவர்களின் ஓ.எம்.ஆர். தாள் மற்றும் தேர்வு புக்லெட் மாறியது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் தங்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 20ம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மேலும், இரண்டு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான நீட் மறுதேர்வை நடத்திய பின்னரே முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இடைக்கால உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கை உச்சநீதிமன்றத்திடம் என்.டி.ஏ கொண்டு சென்றது. நீதிபதிகள் எல். நாகேஷ்வர ராவ், சஞ்சீவ் கானா,பி.ஆர் காவை ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது 2 பேருக்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. மும்மை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு தள்ளுபடி செய்கிறோம். பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு என்ன செய்வது தொடர்பான கேள்விக்கு தீபாவளி விடுமுறைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், www.nta.ac.in and https://neet.nta.nic.in என்ற இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்திய மாணவர் சங்கத்தின் தேசம் தழுவிய நீட் தேர்வு இரத்து செய்ய வலியுறுத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.#RejectNEET#BanNEET #RejectNEP#SFI pic.twitter.com/klJ1D7LHZ6
— SFI Tamilnadu (@TamilnaduSfi) October 27, 2021
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணையும், neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்