மேலும் அறிய

NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

NEET UG 2026 Date: இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. 2026ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 3 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்தப்பட்டு ஜூன் மாதத்தில் முடிவுகள் வெளியாகும். அந்த வகையில் நீட் தேர்வு 2026ம் ஆண்டு மே 3ம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்காக இன்று (பிப்ரவரி 8) முதல் மார்ச் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வானது நடத்தப்படுகிறது. 180  கேள்விகளுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில் ஒவ்வொரு கேள்விகளுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆஃப் லைன் முறையில் நடத்தப்படும் நீட் தேர்வை எழுத பொதுப்பிரிவினருக்கு ரூ.1700, இதற பிரிவினருக்கு ரூ.1600, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு ரூ.1000, இந்தியாவிற்கு வெளியே தேர்வு மையங்களை தேர்வு செய்பவர்களுக்கு ரூ.9,500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நீட் தேர்வானது ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. 

விண்ணப்பிப்பது எப்படி?

  • இந்த தேர்வானது மே 3ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். விண்ணப்பித்தவர்கள் மார்ச் 19ம் தேதி முதல் 12ம் ஆம் தேதிக்குள் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் மேற்கொள்ளலாம்.
  • https://neet.nta.nic.in/ என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் உள்ளே செல்லவும்.
  • அதில் கீழே Registration for NEET(UG)-2026 என காட்டப்பட்டிருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன்பின் உள்ளே சென்றால் Already registered Candidate வழியாக ஏற்கனவே கடந்த முறை தேர்வு எழுதியவர்களுக்கு விண்ணப்பம் எண் மற்றும் பாஸ்வேர்ட்  கொடுக்கப்பட்டிருக்கும். அதனைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து விண்ணப்பிக்கலாம்.
  • முதல்முறையாக நீட் எழுதப் போகிறவர்கள் Register yourself NEET (UG) 2026 என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள் நுழையவும்.அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை நிரப்பி சரியான ஆவணங்களை இணைத்து விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தலாம்.
  • கட்டணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும், தேர்வு முடிந்த பிறகு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget