மேலும் அறிய

NEET Re Exam: வெளியான அறிவிப்பு: இந்த மாணவர்களுக்கெல்லாம் நீட் மறுதேர்வு- தேசியத் தேர்வுகள் முகமை அதிரடி!

நீட் மறு தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, ஜூன் 23ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வறையில் நேரக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனினும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீட் தேர்வு வினாத்தாள் மோசடி, ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒரே தேர்வறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

எங்குமே முறைகேடு நடைபெறவில்லை

எனினும் எங்குமே முறைகேடு நடைபெறவில்லை என்றே என்டிஏ திட்டவட்டமாகத் தற்போதுவரை தெரிவித்து வருகிறது.

ஜூன் 23ஆம் தேதி நீட் மறுதேர்வு

நீட் மறு தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, ஜூன் 23ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு முன்னதாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை இன்றே (ஜூன் 13) வெளியாகும் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது. கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற மதிப்பெண்களே உண்மையான மதிப்பெண்களாக இருக்கும் எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்தத் தேர்வை எழுதினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை மாதம் 6ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே மறுதேர்வு முடிவுகளையும் வெளியிட என்டிஏ முடிவுசெய்து அறிவித்துள்ளது.

முன்னதாக தேர்வு மையங்களில் ஏற்பட்ட நேரம் குறைவாக வழங்கப்பட்ட குளறுபடிகள் காரணமாக, சில மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதை எதிர்த்து 10-க்கும் மேற்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்தபோதுதான் தேசிய தேர்வுகள் முகமை இவ்வாறு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

வழக்கு விசாரணையின்போது, கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கலந்தாய்வு, மாணவர் சேர்க்கையை ஏன் தாமதப்படுத்த வேண்டும்?

இந்த விவகாரத்தால் மற்ற மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கையை ஏன் தாமதப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
Embed widget