மேலும் அறிய

NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?

NEET Fee Refund 2026: பணப்பரிமாற்றம் நேரடியாக வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட உள்ளதால், மாணவர்கள் வழங்கும் வங்கி கணக்கு தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நீட் தேர்வு கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான போர்ட்டல் திறக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று காணலாம்.

2026ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான அதிகாரப்பூர்வ ஆன்லைன் போர்ட்டல் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தகுதியான மாணவர்கள், தங்களுக்குச் சேர வேண்டிய கட்டணத் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக, தங்களது வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக வங்கிக் கணக்குக்கே!

நீட் தேர்வு மற்றும் அதனையொட்டிய நடைமுறைகளின் போது மாணவர்களால் செலுத்தப்பட்ட முன்பணம் அல்லது திரும்பப் பெறத்தக்க கட்டணத்தை எந்தவிதமான இடையூறுமின்றி நேரடியாக மாணவர்களுக்கே திருப்பி அளிக்கும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்காக பிரத்யேகமாகத் திறக்கப்பட்டுள்ள இந்த இணையதளப் பக்கத்தில், மாணவர்கள் தங்களின் சரியான வங்கி விவரங்களைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

வங்கி விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பது எப்படி?

  1. இணையதளம்: மாணவர்கள் முதலில் nta.nic.in என்னும்  அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
  2. இணைப்பைக் கிளிக் செய்தல்: முகப்புப் பக்கத்தில் 'NEET Fee Refund 2026' அல்லது 'வங்கி விவரங்களைச் சமர்ப்பிக்கவும்' (Submit Bank Details) என்று குறிப்பிடப்பட்டுள்ள நேரடி இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  3. லாகின் செய்தல் (Login): அடுத்த பக்கத்தில், தங்களின் நீட் பதிவு எண் (Application/Roll Number) மற்றும் அதற்கான கடவுச்சொல் அல்லது பிறந்த தேதியை உள்ளிட்டு தங்களின் கணக்கிற்குள் உள்நுழைய வேண்டும்.
  4. விவரங்களைப் பதிவு செய்தல்: திரையில் தோன்றும் புதிய படிவத்தில், வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், வங்கியின் கிளை மற்றும் ஐ.எப்.எஸ்.சி எண் ஆகியவற்றை எவ்வித எழுத்துப் பிழையுமின்றி கவனமாகப் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக, கணக்குதாரரின் பெயர் வங்கிப் புத்தகத்தில் உள்ளவாறே சரியாக இருக்க வேண்டும்.
  5. சமர்ப்பித்தல்: அனைத்து விவரங்களையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்த பின்னர் சமர்ப்பிக்க வேண்டும். எதிர்காலத் தேவைக்காக, விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டத பக்கத்தை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

பணப்பரிமாற்றம் நேரடியாக வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட உள்ளதால், மாணவர்கள் வழங்கும் வங்கி கணக்கு தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு மே 27ஆம் தேதி இரவு 11.50 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

முடக்கப்பட்ட அல்லது தவறான வங்கி கணக்கு விவரங்களை அளித்தால், பணத்தைத் திரும்பப் பெறுவதில் தேவையற்ற சிக்கல்களும் தாமதமும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2026/05/202605222022919758.pdf என்ற அறிவிக்கையில் இதுகுறித்த முழு விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.    

உதவி எண்கள்: +91-11-40759000, இ-மெயில் முகவரி: neetug2026@nta.ac.in   

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget