மேலும் அறிய

NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?

NEET Re Exam Score cards: 2024ஆம் ஆண்டு கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதி இரவே, நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின. இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடம் பெற்றனர். இது அதிர்ச்சியை ஏற்பட்டது.

நீட் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள்

முன்னதாக நீட் தேர்வின்போது ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, சில மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.

முதலில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்தது. ஆனால் இதுதொடர்பான விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டனர். பிஹார், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கைது நடந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார்.

மறுதேர்வு எழுதாத 48 சதவீதம் மாணவர்கள்

 இதற்கிடையே நடந்து முடிந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு, அதனை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் 7 மையங்களில் 1,563 பேருக்கு மறுதேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. மறுதேர்வில் 48 சதவிகித மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இந்தத் தேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதில் சண்டிகர் மையத்தில் 2 தேர்வர்கள் தேர்வை எழுதவில்லை. ஏராளமான டாப்பர்கள் இடம்பெற்றதால் அதிகம் கெடுபிடிக்கு உள்ளாக்கப்பட்ட ஜஜ்ஜார் மையத்தில், 494 பேர் தேர்வு எழுத வேண்டி இருந்த நிலையில், 287 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். சத்தீஸ்கரில் 291 தேர்வர்களும் குஜராத்தில் ஒருவரும் மேகாலயாவில் 234 தேர்வர்களும் தேர்வை எழுதினர்.

இந்தத் தேர்வில் கலந்துகொள்ளாத 48 சதவீத மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் இல்லாமல் தாங்கள் பெற்ற மதிப்பெண்களையே இறுதியாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • தேர்வர்கள் nta.ac.in/NEET என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • முகப்புப் பக்கத்தில் NEET UG results இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட லாகின் விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • சப்மிட் பொத்தானை அழுத்தவும்.
  • தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
  • டவுன்லொடு செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://exams.nta.ac.in/NEET

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Thiruvallur District Holiday : ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!

வீடியோ

Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 21-ம் தேதி பல்வேறு இடங்கள்ல மின் தடை இருக்கு; அதுல உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 21-ம் தேதி பல்வேறு இடங்கள்ல மின் தடை இருக்கு; அதுல உங்க ஏரியா இருக்கா பாருங்க
Embed widget