மேலும் அறிய

NEET: பிரதமரிடம் நேருக்கு நேராகக் கேட்ட ஒரே முதல்வர் ஸ்டாலின்- அமைச்சர் பொன்முடி பெருமிதம்

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாகவும் அதை ஏற்க மாட்டோம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாகவும் அதை ஏற்க மாட்டோம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

’’2010ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில், தமிழ் வழியில் பொறியியல் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தோம். ஆக பிராந்திய (தமிழ்) மொழியில் தொழில் படிப்புகள் என்பது ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு இருப்பதைத்தான் புதிய கல்விக் கொள்கையில் சொல்லி இருக்கிறார்கள். 

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் இருப்பது உண்மை. இதனால் தமிழ்நாடு கல்விக் கொள்கை விரைவில் அறிமுகம் செய்யப்படும். வளர்ச்சிகளை உருவாக்கும் வகையில் அவை இருக்கும். பள்ளி, இளங்கலை, முதுகலைப் படிப்புகள் தமிழகத்தில் சரியான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. 

நேருக்கு நேராகப் பிரதமரிடம் கேட்ட முதலமைச்சர் 

எனவே தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அமல்படுத்தவும் வேண்டியதில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நேருக்கு நேராகப் பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டார். க்யூட் முதுகலைத் தேர்வை 22 மத்தியப் பல்கலைக்கழகங்கள் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளன. 

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான அட்டவணை வெளியிட்டுள்ளது. இங்கு சேர ஜூலை 1ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த பாடத்திட்டங்கள் இருக்கும். 

முதற்கட்டமாகச் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, கரூர் உள்ளிட்ட 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உயிர் மருத்துவ மின்னணுவியல், தளவாடத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு புதிய துறைகளில் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


NEET: பிரதமரிடம் நேருக்கு நேராகக் கேட்ட ஒரே முதல்வர் ஸ்டாலின்- அமைச்சர் பொன்முடி பெருமிதம்

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தனியார் கல்லூரி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறும். நீட் மருத்துவக் கலந்தாய்வுக்குப் பிறகே பொறியியல் கலந்தாய்வு தொடங்கும்.

வரும் கல்வியாண்டிலும் ஆன்லைன் மூலமே பொறியியல் கலந்தாய்வு நடைபெறும். அரசுப் பள்ளிகளில் விண்ணப்பிப்பதற்கான வசதிகளைச் செய்து தர, பள்ளிக் கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்’’. 

இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!
விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
Revanth Reddy: ”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
Embed widget