மேலும் அறிய

UPSC SCHOLARSHIP 2023: நாளை கடைசி- யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு மாதாமாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?

UPSC SCHOLARSHIP EXAM 2023: யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு, முதல்நிலைத் தேர்வை எழுத மாதந்தோறும் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி ஆகும். 

யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு, முதல்நிலைத் தேர்வை எழுத மாதந்தோறும் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி ஆகும். 

ஏற்கெனவே அரசு சார்பில் யுபிஎஸ்சி (UPSC) முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது முதல்நிலைத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு வழங்கப்படும். செப்டம்பர் 9ஆம் தேதி இந்தத் தேர்வு நடக்க உள்ளது. 

இளங்கலைப் பட்டம் கட்டாயம்

இதில், 50 மாணவர்கள் முதல்முறையாகத் தேர்வை எழுதுபவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு 21 வயது முடிந்திருக்க வேண்டும். அதேநேரத்தில் 01.08.2024-ல் 22 வயதை எட்டாமல் இருக்க வேண்டும். எனினும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. அதேபோல தேர்வை எழுதும் நபர்கள், ஏதேனும் ஓர் இளங்கலைப் பட்டத்தை முடித்திருக்க வேண்டும். 

ஏற்கனவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ. புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதனால் அந்த மையங்களுக்குத் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படாது.

ஆங்கிலத்தில்‌ மட்டுமே கேள்விகள்‌ 

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்களில்  கொள்குறி வகையில் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.  மொத்தம் 150 கேள்விகளுக்குத் தேர்வு நடக்கும். (100 -பொது அறிவு  மற்றும் 50 - CSAT தேர்வு)

1. தவறான பதில்களுக்கு எதிர்‌மறை மதிப்பெண்கள்‌ இல்லை.
2. கேள்விகள்‌ ஆங்கிலத்தில்‌ மட்டுமே இருக்கும்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://nmcep.tndge.org/register?sub_id=eyJpdiI6ImZreUFYN0E3V0tjc0hxa3doZmQ4UXc9PSIsInZhbHVlIjoiS0kwQURNVTB1WTM1ZSt6eXVhYVlUdz09IiwibWFjIjoiNzI0MzVjMjY2YjQxYzQ5ZGI3MWI3NDFjOGQ3MWRmMDc4ZGYyOTk5NmM3ZmIwNDJiYjk5MjlhNTk3ZGFmMDU1ZSIsInRhZyI6IiJ9 என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 

இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கிய நிலையில், தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை (17.08.2023) கடைசித் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை குறித்து முழுமையாக அறிய https://naanmudhalvan.tn.gov.in/pdfs/UPSC%20PRELIMS%20Scholarship%20Exam-%20Notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள். 

மேலதிக தகவல்களுக்கு 

செல்பேசி எண்கள்- 9043710214 / 9043710211  (10:00 am – 05:45 pm)

இதையும் வாசிக்கலாம்: UPSC SCHOLARSHIP EXAM 2023: யுபிஎஸ்சி தேர்வரா நீங்க? மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, பாடத்திட்டம் இதோ! 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget