மேலும் அறிய

GATE 2024: பொறியியல் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி; எப்படி?- முழு விவரம்!

பொறியியல் முதுநிலை படிப்புகளில் சேர நடத்தப்படும் GATE தேர்வுக்கு தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க இன்றே (அக். 20) கடைசித் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

பொறியியல் முதுநிலை படிப்புகளில் சேர நடத்தப்படும் GATE தேர்வுக்கு தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க இன்றே (அக். 20) கடைசித் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

எதற்காக கேட் தேர்வு?

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற பெயரில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. 

அதேபோல பொறியியல், தொழில்நுட்பம் கட்டுமானம், அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கும் முனைவர்கள் படிப்புகளில் சேருவதற்கும் கேட் தேர்வு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் கேட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்களை நியமனம் செய்கின்றன. 

ஆண்டுதோறும் நடைபெறும் GATE தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  

2024ஆம் ஆண்டுக்கான கேட் (GATE) தேர்வை ஐஐஎஸ்சி பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக.24ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், கால அவகாசம் அக்.5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 12ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி முதல் தாமதக் கட்டணம் செலுத்தி மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அவ்வாறு விண்ணப்பிக்க இன்று (அக்.20) கடைசித் தேதி ஆகும். 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பொறியியல் 3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2024ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கிடையே மாணவர்கள் நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். 

முக்கிய தேதிகள்

கேட் தேர்வு இந்தியா முழுவதும் பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ள தேர்வில், முதல் ஷிஃப்ட் கால 9.30 முதல் 12.30 மணி வரையிலும் 2ஆம் ஷிஃப்ட் 2.30 முதல் 5.30 மணி வரையிலும் நடக்க உள்ளது. ஜனவரி 3ஆம் தேதி அன்று அனுமதிச் சீட்டு வெளியாக உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் https://goaps.iisc.ac.in/login  என்ற முகவரியை க்ளிக் செய்து, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்து விரிவாக அறிய https://gate2024.iisc.ac.in/exam-cities/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், என்ன தகுதி என்று மாணவர்கள் இங்கே https://gate2024.iisc.ac.in/eligibility-criteria/ தெரிந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: gate2024.iisc.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS இடங்கள் 200 ஆக உயர்வு! மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி குட் நியூஸ்!
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS இடங்கள் 200 ஆக உயர்வு! மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி குட் நியூஸ்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
ஆறே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த Royal Enfield Hypershift Classic 650 பைக்! அப்படி என்னயா இருக்கு?
ஆறே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த Royal Enfield Hypershift Classic 650 பைக்! அப்படி என்னயா இருக்கு?
Embed widget