மேலும் அறிய

JEE Mains Result 2023: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு; மதிப்பெண்களைப் பார்ப்பது எப்படி?

பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு (2023) முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதில் மதிப்பெண்களைப் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். 

பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு (2023) முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதில் மதிப்பெண்களைப் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். 

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. 

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய 13 மொழிகளில் நடத்தப்பட்டது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.  

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. 2023ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற்றது. 

இதற்கிடையே முதல் அமர்வுக்கு மாணவர்கள் ஜனவரி 12ஆம் தேதி வரை jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் ஜனவரி 14 வரை விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொண்டனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.


JEE Mains Result 2023: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு; மதிப்பெண்களைப் பார்ப்பது எப்படி?

இரண்டாவது அமர்வு எப்போது?

இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன. இந்த அமர்வுக்கு, மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள் தர வரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

95.8% பேர் எழுதிய தேர்வு

இந்தத் தேர்வின் முதலாம் தாளை எழுத 860064 பேர் விண்ணப்பித்தனர். இரண்டாம் தாளை எழுத 46465 பேர் விண்ணப்பித்தனர். கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 3.84 சதவீதம் பேர் அதிகம் விண்ணப்பித்தனர். கடந்த முறை 7.69 லட்சம் பேர் ஜேஇஇ மெயின் தேர்வை எழுதினர். 2023ஆம் ஆண்டில் 8.23 லட்சம் பேர் தேர்வை எழுதினர். அதாவது 95.8% பேர் அதிகபட்சமாக இந்த முறை தேர்வு எழுதினர். 

இதற்கிடையே ஜேஇஇ இரண்டாவது அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (பிப்ரவரி 7ஆம் தேதி) தொடங்கியுள்ளது. மாணவர்கள் இதற்கு மார்ச் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் அமர்வு மதிப்பெண்களைப் பார்ப்பது எப்படி?

* தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/results-for-jee-main-2023-paper-1-b-e-b-tech/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்யவும். 

* பிறந்த தேதி, செக்யூரிட்டி பின் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்யவும்.

* மேலே கூறப்பட்டவற்றைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Teachers Promotion : ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?

வீடியோ

Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Embed widget