மேலும் அறிய

JEE Advanced 2022: ஆக.23 முதல் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஹால் டிக்கெட்:  பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஹால் டிக்கெட்டை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஹால் டிக்கெட்டை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள். 

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் ஜூலை 11ஆம் தேதி வெளியாகின. இதையடுத்து, ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் நாள் காலி 9 முதல் 12 மணி வரையும் இரண்டாவது தாள் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப, ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு  கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்வர்கள் இந்தத் தேர்வுக்கு ஆகஸ்ட் 7 முதல் விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 12 கடைசித் தேதி ஆக இருந்தது. அன்று மாலை 5 மணி வரை தேர்வர்கள் jeeadv.ac.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பித்தனர். 

இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை ஆகஸ்ட் 23 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு நடைபெறும் நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


JEE Advanced 2022: ஆக.23 முதல் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஹால் டிக்கெட்:  பதிவிறக்கம் செய்வது எப்படி?

இதுவரை 1.6 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 50 வெளிநாட்டு மாணவர்களும் அடங்குவர். ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று, இரண்டு ஷிஃப்டுகளாகத் தேர்வு நடைபெற உள்ளது. காலை 9 முதல் 12 மணி வரையும் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு தாள்களைக் கொண்டது இந்தத் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. 

தேர்வு முடிவுகள் செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு குறித்த முழுமையான கால அட்டவணையை https://jeeadv.ac.in/schedule.html என்ற இணைய முகவரி மூலம் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.

ஜேஇஇ மெயின் தேர்வின் தரவரிசையின் அடிப்படையில் இந்திய தொழில்நுட்பக் கழகங்களுக்கான (IIT's) மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

* 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
முதல்வர் விஜயின் மௌனம் வேதனை அளிக்கிறது: பகுதிநேர ஆசிரியர்கள்..
முதல்வர் விஜயின் மௌனம் வேதனை அளிக்கிறது: பகுதிநேர ஆசிரியர்கள்..

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Chennai ExpressWay: 106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்
106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்
Fishermen Alert: ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
Gold and silver rate today : தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இன்று மீண்டும் விலை குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இன்று மீண்டும் விலை குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
ADMK:
ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
Embed widget