மேலும் அறிய

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதுமையான கற்றல்: 20 ஆயிரம்‌ பள்ளிகளுக்கு இணைய வசதி அளித்த அரசு!

மாணவர்களின்‌ கற்றல்‌ கற்பித்தலை எளிமையாக்கும்‌ பொருட்டு பாடப்‌ பொருள்கள்‌ அனைத்தும்‌ காணொளி வாயிலாக எளிமையாகப்‌ புரிந்துகொள்ளும்‌ வகையில்‌ வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

வளர்ந்துவரும்‌ தொழில்நுட்ப உலகில்‌ எதிர்காலத்திற்கு எற்ற வகையில்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களைத்‌ தயார்படுத்தும்‌ பொருட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது என்பதைக்‌ கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சரின்‌ சீரிய முயற்சியால்‌ தமிழ்நாடு அரசு தற்போது தொழில்நுட்ப விரிவாக்க நிகழ்வினை ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு வருகிறது.

புத்தகங்கள்‌ மற்றும்‌ கரும்பலகைகள்‌ வாயிலாக நடைபெற்ற கற்றல்‌ கற்பித்தல்‌ நிகழ்வின்‌ ஓர்‌ உச்சமாக உரைகள்‌, படங்கள்‌, ஆடியோ மற்றும்‌ வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில்‌ தகவலைப்‌ பெபெற்று பாடப்‌ பொருள்களை எளிதாகப்‌ புரிந்துகொள்ளவும்‌, பெற்ற தகவல்களைத்‌ தக்கவைத்துக்‌ கொள்ளவும்‌ மற்றும்‌ அரசு பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்குத்‌ தொழில்நுட்பத்துடன்‌ பொருத்தமான கற்றல்‌ சூழலை உருவாக்கவும்‌ 8180 உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ (Hi-Tech Labs) ரூ.519.73 கோடி மதிப்பீட்டிலும்‌ மற்றும்‌ 22,931 திறன்மிகு வகுப்பறைகள்‌ (Smart Classrooms) ரூ.455.32 கோடி மதிப்பீட்டிலும்‌ 46712,742 மாணவ மாணவிகள்‌ பயனடையும்‌ வகையில்‌ அமைக்கப்பட்டு வருகின்றன.

6 Mbps இணைய வசதி

6,023 அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள உயர்‌தொழில்நுட்ப ஆய்வகங்களில்‌ 5 மற்றும்‌ 6 Mbps இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள்‌ பயன்படுத்தி வந்தனர்‌.

தற்போதைய நிலையில்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ கற்பித்தலை எளிமையாக்கும்‌ பொருட்டு பாடப்‌ பொருள்கள்‌ அனைத்தும்‌ காணொளி வாயிலாக எளிமையாகப்‌ புரிந்துகொள்ளும்‌ வகையில்‌ வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும்‌ மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள்‌, மொழி ஆய்வகச்‌ செயல்பாடுகள்‌, மனவெழுச்சி நலன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சிகள்‌ மற்றும்‌ மாணவர்களுக்கான மதிப்பீடுகள்‌ போன்றவை உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ மற்றும்‌ திறன்மிகு வகுப்பறைகள்‌ மூலம் வழங்கப்பட உள்ளது.

மேற்குறிப்பிட்ட செயல்பாடுகளைப்‌ பள்ளிகளில்‌ மேற்கொள்வதற்கு ஏற்கனவே இருந்த 5 மற்றும்‌ 6 Mbps இணைய வேகத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்‌ட வருகிறது.

மொழி ஆய்வகங்கள்

இதன்மூலம்‌ 46 லட்சம்‌ மாணவர்கள்,‌ கடினமான பாடப்‌ பொருட்களை எளிமையாக காணொளி வாயிலாக கற்பதற்கும்‌ மாணவர்கள்‌ கற்ற பாடங்களை ஆன்லைன்‌ மதிப்பீடுகள்‌ மூலமாக பயிற்சிகள்‌ மேற்கொண்டு பாடக்‌ கருத்துக்களை தெளிவாக கற்பதற்கும்‌, உயர்கல்வி வழிகாட்டுதல்களை எளிமையாகப்‌ பெறுவதற்கும்‌, ஆங்கிலத்தில்‌ மொழிப்‌ புலமை பெற மொழி ஆய்வகங்களைப்‌ பயன்படுத்துவதற்கும்‌, கணிப்பொறி சார்ந்த திறன்களை மேம்படுத்திக்‌ கொள்வதற்கும்‌ வழிவகை ஏற்படும்‌.

தமிழ்நாடு அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்துடன்‌ இணைந்து இணையதள வசதியினை ஏற்படுத்தி வருகிறது, தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌, இதுவரை 5,913 பள்ளிகளில்‌ இணையதள வசதி எற்படுத்தப்பட்‌டுள்ளது.

மொத்தமுள்ள 6,992 நடுநிலைப்பள்ளிகளில்‌ 3,799 பள்ளிகளில்‌ இவ்வசதி எற்படுத்தப்பட்டுள்ளது. மேலும்‌ தொடக்கப்‌ பள்ளிகளைப்‌ பொறுத்தமட்டில்‌ மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில்‌ 10,620 பள்ளிகளில்‌ இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேகம்‌ கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 37,553 அரசுப்‌ பள்ளிகளில்‌ 20,332 பள்ளிகளில்‌ இப்பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப்‌ பள்ளிகளுக்கு ஜுன்‌ மாத இரண்டாம்‌ வார இறுதிக்குள்‌ நிறைவடையும்‌ வண்ணம்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது. வரும்‌ கல்வியாண்டு முதல்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ/ மாணவிகள்‌ கற்றல்‌ செயல்பாட்டில்‌ புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மன நிலையோடு கல்வி கற்பார்கள்‌ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Embed widget