இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
India Post GDS Recruitment 2026: மத்திய அரசின் இந்திய அஞ்சல் துறையில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்களை கீழே விரிவாக அறியலாம்.

இந்திய அஞ்சல் துறை GDS வேலைவாய்ப்பு 2026: முழு விவரங்கள்
இந்திய அஞ்சல் துறையானது, கிராமின் தக் சேவக் (GDS) ஆன்லைன் பணிநியமன அட்டவணை-II, ஜூலை 2026-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) மற்றும் தக் சேவக் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பாணை அண்மையில் வெளியிடப்பட்டது.
முக்கிய தேதிகள் என்னென்ன?
-
ஒருமுறை பதிவு: ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 19, 2026 வரை (மாலை 5 மணிக்குள்).
-
ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்துதல்: செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 21, 2026 வரை (மாலை 5 மணிக்குள்).
-
விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான அவகாசம்: செப்டம்பர் 23 மற்றும் 24, 2026 (மாலை 5 மணிக்குள்).
சம்பள விவரங்கள் (TRCA அடிப்படை)
தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு TRCA (Time Related Continuity Allowance) அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM): ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை.
உதவி கிளை போஸ்ட்மாஸ்டர் (ABPM) மற்றும் தக் சேவக்: ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை.
இந்த TRCA ஊதியத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆண்டுதோறும் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இது தவிர, அகவிலைப்படி, GDS பணிக்கொடை மற்றும் சேவை விடுவிப்பு பலன் திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு பலன்களுக்கும் இவர்கள் தகுதியுடையவர்கள்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
இந்த GDS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கும் கோட்டத்தில் உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும்.
கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்
-
பெண் விண்ணப்பதாரர்கள்
-
பட்டியலினத்தவர்
-
பழங்குடியினர்
-
மாற்றுத்திறனாளிகள்
-
திருநங்கைகள்
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கிரெடிட்/ டெபிட் கார்டுகள், நெட் பேங்க்கிங் மற்றும் UPI போன்ற ஆன்லைன் முறைகள் மூலமாகத் தங்களது கட்டணத்தைச் செலுத்தலாம். ஒருமுறை செலுத்தப்பட்ட கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய தேர்வர்களின் கல்வித் தகுதி, பணியிடங்கள், தேர்வு முறை, அறிவிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாகக் காண https://www.indiapost.gov.in/gdsonlineengagement/pdf/descriptive-notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்






















