மேலும் அறிய

ஐஐடி சென்னையில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: இனி ஏஐ ஆராய்ச்சிகள் ஸ்டார்ட் அப்களாக மாறும்!

சென்னை ஐஐடியில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: செயற்கை நுண்ணறிவு சார் நிறுவனங்களை உருவாக்க திட்டம்

சென்னை ஐஐடியில் உள்ள வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி (WSAI), ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய ஏஐ, மெஷின் லேர்னிங் மற்றும் டேட்டா சயின்ஸ் நிறுவனங்களை உருவாக்குவதற்காக ஏஐ ஸ்டுடியோ என்ற புதிய தொழில்முனைவோர் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

சுகாதாரம், கல்வி, பொறுப்பான ஏஐ மற்றும் இந்திய மொழிகளுக்கான ஏஐ ஆகிய துறைகளில் இந்த ஸ்டுடியோ சிறப்புக் கவனம் செலுத்தும். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனர்கள் தங்களின் யோசனைகளை வெற்றிகரமான வணிகமாக மாற்ற இது உதவும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் குழுக்களுக்கு ஆரம்பக்கட்ட நிதி, கிளவுட் வசதிகள், ஆய்வகப் பயன்பாடு, துறைசார் வல்லுநர்களின் வழிகாட்டுதல் மற்றும் சந்தைக்கு ஏற்ற தயாரிப்பாக மாற்றுவதற்கான ஆதரவு ஆகியவை வழங்கப்படும். இறுதியாக இவை ஐஐடிஎம் இன்குபேஷன் செல் அமைப்பிற்குள் கொண்டுவரப்படும்.

WSAI தலைவர் பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் கூறுகையில், "ஆராய்ச்சிகளை வெறும் கட்டுரைகளாக வெளியிடுவதோடு நிற்காமல், மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் அவற்றை நிறுவனங்களாக மாற்றுவதே எங்கள் நோக்கம்" என்றார்.

ஏஐ ஸ்டுடியோ சிஇஓ ரூபா கரேமுங்கிகர் பேசுகையில், "தொழில்நுட்பமும் இந்தியாவின் லட்சியங்களும் இணையும் இத்தருணத்தில், சந்தையின் உண்மையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நிறுவனங்களை உருவாக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார். இது ஐஐடி சென்னையின் முன்னோடி முயற்சி என கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் பள்ளி தலைவர் பேராசிரியர் சத்ய சேஷாத்ரி குறிப்பிட்டார்.

விண்ணப்ப முறை, தகுதிகள் என்னென்ன?

ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளி தொழில்முனைவோரும் தங்களின் ஏஐ, டேட்டா சயின்ஸ் யோசனைகளுடன் இதில் பங்கேற்கலாம்.

இதற்கான தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும். முதலில் அதிக அளவிலான விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, அதிலிருந்து சில சிறந்த திட்டங்கள் மட்டும் ஸ்டுடியோவின் 6 மாத கால முழுமையான திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படும். நிறுவனங்களுக்கான நிதி திரட்டும் நிலையில் இருப்பவர்களுக்கு, இத்திட்டம் மேலும் 3 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும்.

அக்.3 முதல்..

இதன் முதல் சுற்றிற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 3 அன்று தொடங்கவுள்ளன. ஆண்டுக்கு குளிர்காலம் மற்றும் வசந்த காலம் என இரு சுற்றுகளாக இந்த ஸ்டுடியோ செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை ஐஐடி சென்னை உருவாக்கியுள்ள டீப் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மொத்த மதிப்பு 8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதுடன், 11,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget